சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத் ஃபாசில் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் மாரீசன். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த நிலையில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு யூடியூப் சேனலுக்கு நடிகர் பஹத் ஃபாசில் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது தொகுப்பாளர், “பார்சிலோனாவில் உபர் ஓட்டுநராக வேண்டும் என்ற கனவு இன்னும் இருக்கிறதா?” என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு ஆம் என பதிலளித்த அவர், “மக்கள் படங்களில் என்னைப் பார்த்து ‘சோர்வடையும் போது’, பார்சிலோனாவில் உபர் ஓட்டுநராக வேலை தேடுவேன். மக்களை பயணங்களுக்கு அழைத்துச் செல்வதை விட திருப்திகரமானது எதுவும் இல்லை. இது நகைச்சுவையாகக் கூறினாலும், ஒருவரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்வது அல்லது ஒருவரின் இலக்கைப் பார்ப்பது மிகவும் அழகான விஷயம் என நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கார் ஓட்ட வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவறவிடமாட்டேன். அது நான் இன்னும் மிகவும் ரசிக்கும் ஒன்று. அதனை எனக்கான நேரமாக உணர்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
’உபர் டிரைவராக இருப்பதை விட தனக்கு மகிழ்ச்சியைத் தரும் எதுவும் இல்லை’ என தனது மனைவி நஸ்ரியாவிடம் அடிக்கடி கூறி வருவதாக பஹத் முன்னர் ஒருமுறை கூறியிருந்தார்.