மொஹரமை முன்னிட்டு ஜூலை 7-ந் தேதி அரசு விடுமுறை என சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. Muharram Tamil Nadu
இது தொடர்பாக உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளதாவது: மொஹரமை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இது தவறான தகவலாகும்.
“கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 ஆகும்.” என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த நாள் அறிவிக்கப்பட்டுள்ளதால் 07-07-2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை. தவறான தகவலை பரப்பாதீர்! இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
