ஈரோட்டில் 12-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் அடித்தே கொன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Erode Student Death
ஈரோடு குமலன்குட்டை அரசுப் பள்ளி மாணவர் ஆதித்யா, மயங்கி விழுந்து உயிரிழந்தததாக கூறப்பட்டது. ஆனால் ஆதித்யாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டதால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், குமலன்குட்டை அரசு பள்ளி மாணவர்களிடையே பள்ளிக்கு வெளியே மோதல் ஏற்பட்டுள்ளது; இந்த மோதலில் மாணவன் ஆதித்யா கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அதனாலேயே உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ஆதித்யாவை தாக்கியதாக கூறப்படும் இரு மாணவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.