சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே மூன்று கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) மேலும் பல புதிய வாக்குறுதிகளை வெளியிட்டார்.
எல்லா குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் மாதம் 1000 ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்வது போல அதிமுக ஆட்சியில் ஆண்களும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் வீடு கட்டித்தரப்படும்.
5 லட்சம் பேருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும். அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
முதியோர் உதவித் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இளைஞர்கள், மாணவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் பிரிட்ஜ் வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் விலையில்லா அரிசி போல, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும் என்றார்
மொத்தமாக 297 அறிவிப்புகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
