ADVERTISEMENT

மதுரையில் எம்ஜிஆர் சிலை சேதம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

EPS condemns incident of vandalism of MGR statue

மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (அக்டோபர்6) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை , திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது.

ADVERTISEMENT

புரட்சித்தலைவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன்.

சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவு கூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.

ADVERTISEMENT

இச்செயலை செய்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”என கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share