“தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டது, அதன்பிறகுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது” என சமூக வலைதளங்களில் பலரும் கூறினர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் அமுதா ஐஏஎஸ் விளக்கமளித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 30) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?
அப்போது கரூர் டான்ஜெட்கோ சிஇஓ ஏற்கனவே செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த வீடியோ ஒளிபரப்பட்டது. அதில் அவர், விஜய் உரையாற்றிக்கொண்டிருந்த போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் மற்றும் போக்கஸ் லைட்டுகள் ஆப் ஆகியுள்ளது. அதேசமயம் ஏற்கனவே கரூர் மாவட்ட செயலாளர் விஜய் உரையாற்றும் போது மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தார். அவரது மனு அன்றே மறுக்கப்பட்டது’ என்று கூறியிருந்தார்.
இந்த காட்சியை தொடர்ந்த அமுதா ஐஏஎஸ், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் போக்கஸ் லைட் ஆப் ஆகியுள்ளது. அது வீடியோவை பார்த்தால் தெரியும்.
அதுபோன்று அக்கட்சியினரால் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு கூட்டம் அதிகமானதால் மக்கள் வருகிறார்கள். அப்போது லைட் ஆப் செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் மின்விளக்குகள் எரிந்துகொண்டுதான் இருந்தன என்றார்.
போலீசார் தடியடி நடத்தினார்களா?
“அக்கட்சி தலைவர் மாலை 6 மணி போலத்தான் பிரச்சாரம் நடைபெறும் இடத்தை நோக்கி வருகிறார். அப்போது இங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. அவருடனும் கூட்டம் அதிகமாக வந்தது. அப்போது ஒரு கட்டத்தில் பேருந்தால் நகரக் கூட முடியவில்லை. அதனால் போலீஸ் விலக்கிவிட்டனர்.
பிரச்சாரம் நடக்கும் 50 மீட்டருக்கு முன்னால் நெருக்கடி அதிகமாகிறது. அப்போது டிஎஸ்பி முன்னால் போகவேண்டாம் என்று சொன்னார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறினார்.