டிஜிட்டல் திண்ணை: தேர்தல் தேதி.. திமுகவுக்கு எதிராக ஆர்.என்.ரவி சதி – அறிவிப்பு எப்போது?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. என்ன அறிவிப்பு வரப் போகுதாம்?

ADVERTISEMENT

வேறன்ன.. எலக்‌ஷன் தேதிதான் அறிவிக்கனும்.. அதான் எப்ப? எப்ப?ன்னு ரொம்பவே எதிர்பார்ப்பா இருக்கு..

நம்ம தமிழ்நாட்டோட சேர்த்து அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளாவுல எலக்‌ஷன் நடக்குது..

ADVERTISEMENT

போன டைம் 2021-ல் 8 கட்டமா வோட்டிங் நடந்துச்சு.. தேர்தல் தேதிகளை பிப்ரவரி 26-ந் தேதி பிரஸ் மீட்டுல எலக்‌ஷன் கமிஷன் அறிவிச்சது..

மார்ச் 27-ந் தேதி ஆரம்பிச்சு ஏப்ரல் 29-ந் தேதி வரை 1 மாசம் 8 கட்டமாக வாக்குப் பதிவு நடந்துச்சு..

ADVERTISEMENT

தமிழ்நாட்டுல மார்ச் 12-ந் தேதி நோட்டிபிகேசன் அமலுக்கு வந்தது.. அன்னைக்கே வேட்பு மனு தாக்கல் தொடங்குச்சு… ஏப்ரல் 6-ந் தேதி வாக்குப் பதிவு நடந்துச்சு.. மே 2-ல்தான் கவுண்ட்டிங் நடந்துச்சு..

இன்னைக்கு தேதி மார்ச் 7 ஆகிடுச்சு.. இன்னும் எந்த ஸ்டேட்டுக்கும் எலக்‌ஷன் தேதியை அறிவிக்கல..
அதனால எலக்‌ஷன் என்னைக்கு? எலக்‌ஷன் தேதியை எப்ப அறிவிப்பாங்க? அப்படிங்கிற எதிர்பார்ப்பு அதிகமா இருக்குது..

எப்பதான் எலக்‌ஷன் தேதி அறிவிப்பாங்களாம்?

பொதுவாக எலக்‌ஷன் தேதியை இந்த டைம்ல அறிவிச்சிருக்கனும்தான்..

இருந்தாலும்.. மார்ச் 11-ந் தேதி திருச்சியில மோடி மீட்டிங் பேசுறாரு..

அஸ்ஸாமில் மார்ச் 13-ந் தேதி மீட்டிங்குல கலந்துக்கிறாரு மோடி ..

பொதுவாக தேர்தல் நடக்கிற மாநிலங்களில் மோடி இப்படி கலந்துக்கிற கூட்டங்களில்ல முக்கியமான அறிவிப்பை வெளியிடுவாரு.. அதுக்கு அப்புறமாதான் எலக்‌ஷன் தேதியை அறிவிப்பாங்க..

பீகாரில பெண்களுக்கு ரூ10,000 வழங்குற திட்டத்தை மோடி போன வருஷம் செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கி வைச்சாரு.. அதுக்கு பிறகு அக்டோபர் 6-ந் தேதி பீகார் தேர்தல் தேதியை எலக்‌ஷன் கமிஷன் அறிவிச்சது..

அதே பாணியில பார்த்தா, மோடி மீட்டிங்கு எல்லாம் முடிஞ்ச பிறகு மார்ச் 14-ந் தேதிக்கு மேல எலக்‌ஷன் தேதியை அறிவிக்கலாம்.

2021-ல்ல ஏப்ரல் 6-ந் தேதி ஓட்டுப் போட்டுட்டு ஒரு மாசம் கழிச்சுதான் அதாவது மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை-கவுண்ட்டிங் நடந்துச்சு.. இந்த வருஷமும் போன டைம் மாதிரி நடக்குமா? இல்ல கடைசி கட்டமா நடக்குமா?ன்னு எதிபார்ப்பு இருக்கு.

இது ஒரு பக்கம் இருக்க, தமிழ்நாட்டுல இருந்து மேற்கு வங்கத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாத்திட்டாங்க இல்லையா? ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை விட்டு கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு வேலை செஞ்சிருக்காராம்..

அது என்னான்னு விசாரிச்சப்ப, “தமிழ்நாட்டுல எலக்‌ஷனை சீக்கிரமா நடத்திடாதீங்க.. ஏன்னா திமுக கவர்மெண்ட் கொடுத்த ரூ.5,000 ஆதரவை உருவாக்கி இருக்கு.. அந்த ஆதரவு கொஞ்சம் போகட்டும்.. அதுக்கு அப்புறமா ஏப்ரல் லாஸ்ட்ல கடைசி கட்டமா கூட தேர்தல் நடத்திவிட்டுறங்க”ன்னு அமித்ஷாகிட்ட ஐடியா கொடுத்திருக்கிறாராம் ஆர்.என்.ரவி.. இதே யோசனையை பாஜக சீனியர்களும் எலக்‌ஷன் கமிஷன்கிட்ட சொல்லி இருக்காங்களாம்..

இப்ப எலக்‌ஷன் கமிஷன் என்ன முடிவு எடுக்கும்? எப்ப தேர்தல் தேதி அறிவிக்கும்னுதான் ஒரே எதிர்பார்ப்பா இருக்கு என்றபடியே டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share