மே.வங்க தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் நள்ளிரவில் மாற்றம்..தேர்தல் ஆணையம் அதிரடி!

Published On:

| By Mathi

ECI West Bengal

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலரை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ஏப்ரல் 23, ஏப்ரல் 29 தேர்தல் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

தேர்தல் நடத்தை விதிகள் அமலான சில மணிநேரங்களிலேயே மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளரான நந்தினி சக்கரவர்த்தி அதிரடியாக மாற்றப்பட்டு துஷய்ந்த் நரிலா, புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 31-ந் தேதிதான் நந்தினி சக்கரவர்த்தி, மே.வங்க மாநிலத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேபோல மேற்கு வங்கத்தின் உள்துறை செயலாளர் ஜெகதீஷ் பிரசாத் மீனாவும் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சங்கமித்ரா கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share