சென்னையில் அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன்- வழக்குகள் குறித்து ஆய்வு!

Published On:

| By Mathi

ED Rahul Navin

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீன் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு சென்னையில் முகாமிட்டு 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

இதனிடையே தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வருமான வரித்துறை, கண்ட்ரோல் ரூம் அமைப்பு புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள், இ மெயில்களை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் சென்னைக்கு வருகை தந்துள்ளார். சென்னையில் இன்று அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அமலாக்கத்துறை வழக்குகள் குறித்து அவர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனின் சென்னை பயணம் கவனம் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share