ஆபாச இணையதளத்தின் லோகோவை தனது பேட்டில் பயன்படுத்த அனுமதி கோரிய நிலையில், இங்கிலாந்து அணி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
இங்கிலாந்துஅணியின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ். இவர் அந்நாட்டில் பிரபலமான கிரிக்கெட் தொடரான தி ஹண்ட்ரட் போட்டியில் சசெக்ஸ் ஷார்க்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் அத்தொடரில், ’ஒன்லிஃபேன்ஸ்’ லோகோவை பேட்டில் பயன்படுத்த இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் அனுமதி கோரினார்.

ஒன்லிஃபேன்ஸ் தளத்தின் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடி வருவதாகவும், அதில் இருக்கும் தனது கணக்கை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த லோகோவை பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) போட்டியின் நன்மதிப்பு கருதி மில்ஸின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.
மில்ஸ் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.