காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கதேர் வெள்ளோட்டத்துக்கான யாகசாலை பூஜைகளை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் டிசம்பர் 5-ந் தேதி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள காஞ்சி மகா பெரியவர் சங்கராச்சாரியார் மணி மண்டபத்துக்கு வெள்ளிக்கிழமையன்று துர்கா ஸ்டாலின் சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் மணி மண்டப நிர்வாகிகள் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் செய்வதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் இந்த மரியாதையை வழங்கினர்.
அந்த மணிமண்டப வளாகத்தில் தருமபுர ஆதீனத்தின் யானை மற்றும் ஒட்டகங்களுக்கு மலர்தூவி வழிபாடு நடத்தினார் துர்கா ஸ்டாலின். பின்னர் மூலவரான மகா பெரியவர் சங்கரச்சாரியாரை அவர் வழிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, மணிமண்டப வளாகத்தில் தங்கத்தேர் வெள்ளோட்டத்துக்கான யாகசாலை பூஜைகளை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த தங்கத்தேரையும் அவர் பார்வையிட்டார். பின்னர் தங்கத் தேர் செய்யும் சிற்பிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
இதன் பின்னர் நேற்று டிசம்பர் 6-ந் தேதி தங்கத் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி வடம்பிடித்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
