துல்கர் சல்மானின் காந்தா : முதல் நாள் வசூல் எவ்வளவு?

Published On:

| By Kavi

துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம் 10 கோடி ரூபாயை கடந்து முதல் நாள் வசூலை குவித்துள்ளது.

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி வெளியான படம் ‘காந்தா’. இதில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாளத் திரையுலகின் நட்சத்திர நாயகனான துல்கர் சல்மானுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

அவரது படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம்.

இந்நிலைஉயில் ‘காந்தா’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் சுமார் ரூ. 4 கோடி வசூலித்துள்ளது.

ADVERTISEMENT

உலக அளவில் முதல் நாள் வசூல் ரூ. 7 முதல் 8 கோடி வரை இருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகின.

ஆனால், படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் ரூ. 10.5 கோடி ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share