குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (நவம்பர் 4) கோவை வருகிறார். இதைத்தொடர்ந்து இன்று கோவையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்திய துணை குடியரசுத் தலைவர் கோவை வரும் நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி ஒன்னிபாளையம் கருப்பராயன் திருக்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம் ஆகியபகுதிகள் மற்றும் மிக முக்கிய விருந்தினர் பயணிக்கும் சாலைகள் ஆகியவை தற்காலிக சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டபகுதிகளில் இன்று இரவு 8.00 மணிவரையில் ஆளில்லா விமானங்கள் இயக்குவதற்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்), பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது. தடைசெய்யப்பட்ட காலஅளவில் தடையினை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
