அடுத்த ஷாக்… தமிழகத்தில் குடிநீர் விலை உயர்வு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழகத்தில் மினரல் வாட்டர் விலையை உயர்த்துவதாக இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

20 லிட்டர் வாட்டர் கேன் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் வாட்டர் பாட்டில் 3 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 8-க்கு விற்கப்பட்ட 200 மி.லி. குடிநீர் பாட்டில் இன்று ரூ. 10-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ. 12-க்கும்  உயர்த்தப்பட்டுள்ளது.

மூலப்பொருட்களின் விலை சுமார் 40% வரை அதிகரிப்பு, மின் கட்டண உயர்வு, டீசல் விலை உயர்வு மற்றும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

ADVERTISEMENT

கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் விலையை உயர்த்தாமல் தங்களுக்குள்ளேயே சரிசெய்து வந்தோம். தற்போது தவிர்க்க முடியாத சூழலில் இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

ஈரான் அமெரிக்கா – இஸ்ரேல் போர் காரணமாக பிளாஸ்டிக்  போன்ற மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் விலையும் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ப்ரீமியம் பெட்ரோல் விலை ரூ.2 உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share