அஷ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்த டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெற்றது. இப்படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று (ஜூன் 29) கொண்டாடப்பட்டது. dragon 100 days mysskin sent video
இதையொட்டி இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட வீடியோவில்,
“நான் இப்போது பிரான்சில் இருக்கிறேன். விமானத்தில் இருந்து பிரான்சில் இறங்கியதும் ஒருவர் என் அருகே வந்து, என்னுடைய மனைவி மகாராஷ்டிராவை சேர்ந்தவர். ஃபிளைட்டில் வந்துகொண்டிருந்தபோது டிராகன் படம் பார்த்துக்கொண்டு வந்தார் என்று என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் எங்கு சென்றாலும் ஒரு பிரின்சிபள் போல தான் என்னை பார்க்கிறார்கள்.
பல வருடங்களாக நிறைய படங்களில் நடித்து வருகிறேன். ஆனால், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. இதற்காக இயக்குனர் அஷ்வந்திற்கு நன்றித் தெரிவித்துக்கொள்கிறேன். அஷ்வந்த் நிறைய நல்ல படங்கள் இயக்க வேண்டும்.
இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உதவி இயக்குனர்கள் அனைவரும் என்னை குழந்தை போல பார்த்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் மிகச்சிறந்த இயக்குனர்களாக வருவார்கள். நடிகர் பிரதீப் என்னை பத்திரமாக பார்த்துக்கொண்டார். இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் 100 நாட்கள் திரையரங்களில் ஓடுவது மிகப்பெரிய விஷயம். இங்கிருந்து இந்த பூவை அஷ்வந்திற்கு நான் கொடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.