பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ஜூலை 6-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் எப்போதும் இடம் பெறக் கூடிய ‘செயல் தலைவர் அன்புமணி’ என்பது நீக்கப்பட்டுள்ளது. இதனால் பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்குவதும் உறுதியாகி உள்ளது. Anbumani Ramadoss PMK
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், (செயல்) தலைவர் அன்புமணி இடையேயான மோதல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. ராமதாஸ் நியமித்த நிர்வாகிகளைக் கொண்ட பாமகவின் புதிய செயற்குழு கூட்டம் ஜூலை 8-ந் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்க முடிவு செய்துள்ளார் ராமதாஸ் என நமது மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.
இந்த நிலையில் இன்று ராமதாஸ் வெளியிட்ட பாமக நியமன அறிவிப்புகளில் ‘செயல் தலைவர் அன்புமணி’ என்பது நீக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் புதிய நியமனங்களை அறிவிக்கும் போது, நகல்கள்- செயல் தலைவர், அன்புமணி என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இன்றைய ராமதாஸ் அறிக்கையில் நகல்கள் பகுதியில் ‘செயல் தலைவர் அன்புமணி’ என்பது நீக்கப்பட்டுள்ளது.
இதனால் பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்க இருப்பது உறுதியாகி உள்ளது.