புதிய தமிழகம் கட்சியின் 27 வேட்பாளர்களை அறிவித்தார் டாக்டர் கிருஷ்ணசாமி

Published On:

| By Pandeeswari Gurusamy

krishnasamy

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இன்று (மார்ச் 31) இரண்டாம் கட்ட வேட்பாளர்களாக 27 பேரை அறிவித்தார். மேலும் வரும் ஏப்ரல் 2 ம் தேதி 3 ம் கட்ட பட்டியலையும் அறிவிக்க போவதாக தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூர் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி , சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
ஏற்கனவே முதல்கட்டமாக 43 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக 27 வேட்பாளர்களின் பட்டியலை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.

ADVERTISEMENT
வேட்பாளர்கள் விபரம்
  • இராஜபாளையம் – வழக்கறிஞர் மு.ரமாதேவி
  • சிவகாசி – ௧. காளீஸ்வரி
  • அருப்புக்கோட்டை – கி.ரகுபதி
  • திருச்சுழி – கு. குணசேகரன்
  • தூத்துக்குடி – ரா.ரமேஷ்
  • முதுகுளத்தூர் – ச. மலைச் செல்வம்
  • திருவாடனை – சிவ. பாலுச்சாமி
  • திருவையாறு – வ. வேணு
  • தாராபுரம் – மா. சின்னசாமி
  • திண்டுக்கல் – மா. பிரதீப் பாண்டியன்
  • ஆலங்குளம் – அ. உதயக்குமார்
  • பெரம்பலூர் – த. வெங்கடேசன்
  • அந்தியூர் – தா. பெரியசாமி
  • பல்லாவரம் – அ.தங்கராஜ்
  • ஆலந்தூர் – வேலுச்சாமி
  • பழனி – கு. வாய்க்கால் துரை
  • லால்குடி – வழக்கறிஞர் ப.இளஞ்செழியன்
  • மணச்சநல்லூர் – மு.பாலு
  • ஸ்ரீரங்கம் – வழக்கறிஞர் ஆ.நியூட்டன்
  • திருச்சி மேற்கு – கோ. சண்முகம்
  • துறையூர் – த.இராஜமாணிக்கம்
  • கே.வி.குப்பம் – கு. கந்தன்
  • மடத்துக்குளம் – க. செந்தில்குமார்
  • அணைக்கட்டு – பொ. ஜெயசீலன்
  • திருப்பரங்குன்றம் – சேதுராமன்
  • நத்தம் – ஸ்ரீ. விஜயக்குமார்
  • திருச்சி கிழக்கு – அ. கௌசல்யா

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “வரும் 6 ம் தேதி அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளோம். கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பெறுவோம் .

புதிய தமிழகத்திற்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகள் குறித்த இப்போது சொல்ல முடியாது,
தமிழகத்தில் வித்தியாசமான முறையில் புதிய தமிழகம் கட்சி களமாடுவோம். 3 ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வரும். இன்னும் கூடுதலாக 10 தொகுதிகள் வரை போட்டியிட கூடும் என்றார். வரும் 2 ம் தேதி மூன்றாவது கட்ட பட்டியலை வெளியிடுவோம்” என டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share