மருத்துவர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் – மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதைத்தொடர்ந்து கட்சி இரண்டாக பிரிந்து செயல்படுகிறது.
இந்நிலையில் ராமதாஸ் உடல் நலக்குறைவால் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயம் தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 6) காலை ராமதாஸ்க்கு மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆஞ்சியோ பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். ராமதாஸ்க்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
86 வயதாகும் ராமதாஸுக்கு கடந்த 2013ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.