காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை திமுக கண்டிப்பா தரும்.. செல்வப்பெருந்தகை

Published On:

| By Mathi

Congress DMK Selvaperunthagai

திமுக கூட்டணியில் நாங்கள் கேட்டிருக்கும் தொகுதிகள் நிச்சயம் கிடைக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: திமுகவுடனான கூட்டணியில் ஒரு இழுபறியும் இல்லையே.. கூட்டணி சுமூகமாக இருக்கிறது. கேட்ட தொகுதிகளைக் கண்டிப்பாகத் தருவார்கள்.

ADVERTISEMENT

’அதிகாரத்தில் பங்கு’ குறித்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் முடிவு செய்வார்கள். அகில இந்திய தலைமைக்கு நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

தமிழ்நாடு என்பது பாஜக கூட்டணிக்கான மண் இல்லை, இடம் இல்லை. வரலாறு அவர்களை மன்னிக்காது. நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பாஜகவையும் அதிமுகவையும் புறந்தள்ளி விட்டனர். தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் கொடுத்து என்ன பயன் இருக்கிறது? என விட்டுட்டார்கள். தமிழ்நாட்டு மக்களும் தேர்தலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், தேர்தலன்று பெருவாரியான வெற்றியை இந்தியக் கூட்டணிக்கு தமிழக மக்கள் அளிப்பர். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share