ADVERTISEMENT

தொடங்கிய திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு : முதல்வர் ரேம்ப் வாக்!

Published On:

| By Kavi

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்களும், இளைஞரணியினரும் கலந்துகொண்டுள்ளனர் . 

முதலில் துணை முதல்வரும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முதன்மை செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளார்கள்  ஐ.பெரியசாமி, பொன்முடி,திருச்சி சிவா, அந்தியூர் ப செல்வராஜ், மு.பெ.சாமிநாதன்,  கனிமொழி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு நினைவு பரிசை வழங்கினார். 

ADVERTISEMENT

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் மாநாட்டுக்கு வருகைத் தந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடையில் நடந்து ஒரு பக்கமும் குவிந்திருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்துக்கொண்டே மேடைக்கு வந்தார்.  

பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது புகைப்படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.  

ADVERTISEMENT

தற்போது மாநாடு தொடங்கியிருக்கும் நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்புரை ஆற்றி வருகிறார். 

🔴 LIVE : திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு | DMK Meeting | MK Stalin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share