டிஜிட்டல் திண்ணை: ராகுல்- ஸ்டாலின் என்னதான் நடக்கிறது? சவுமியாவுக்கு ராஜ்யசபா சீட்.. முச்சந்தியில் 3 கட்சிகள்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், ‘தை பிறந்தாலும் வழி பிறக்காது போல’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா திடீர்னு ’நெகட்டிவ் ஆரூடம்’?

ADVERTISEMENT

நாம எங்க ஆரூடம் சொல்றோம்.. ஒவ்வொரு கூட்டணியிலும் ஆளுக்கு ஒரு திசையில திரும்பிகிட்டு இருக்காங்களே அதைத்தான் சொல்றேன்யா..

ஓஹோ.. திமுக- காங்கிரஸ் கூட்டணியில என்னதான்யா நடக்குது?

ADVERTISEMENT

“கூட்டணி ஆட்சியே கிடையாது.. இதுதான் சிஎம் ஸ்டாலின் முடிவு”ன்னு திடீரெனு திமுகவோட சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் டிக்ளேர் செஞ்சிருந்தாரு.. இதை பத்திதான் காங்கிரஸ் சீரியசா பேசிகிட்டு இருக்குது..

ஆமா.. ஐ.பி இப்படி திடீர்னு பேச என்ன காரணமாம்?

ADVERTISEMENT

இதை பத்தி திமுக சோர்ஸ்களிடம் விசாரிப்ப, “ கூட்டணி ஆட்சிதான்னு ராகுல் காந்தி உறுதியாக நிற்கிறாரு.. திமுகவுக்கு நெருக்கடி தர்ற வாய்ஸ் எல்லாமே சாட்சாத் ராகுல் ’ஆசீர்வாதத்துல’தான் வருதுன்னு சிஎம் ஸ்டாலினுக்கும் தெரியும்..

காங்கிரஸ் இன்சார்ஜ் கிரிஷ் சோடங்கர்கிட்ட, பீட்டர் அல்போன்ஸ் இதை பத்தி கேட்டப்ப, ‘எனக்கு என்னங்க தமிழ்நாட்டு பாலிட்டிக்ஸ்ல அக்கறை இருக்கு? ராகுல்ஜி சொல்றாரு.. அதை கன்வே செய்யுறேன்னு’ ஓப்பனாவே சொல்லி இருக்காரு.. இந்த தகவலும் சிஎம்-க்கு வந்தது..

இதை பத்தி மற்ற சீனியர்கள்கிட்ட சிஎம் டிஸ்கஷன் செஞ்சாரு.. அப்ப, “கூட்டணி ஆட்சிங்கிற டிமாண்டை நிச்சயம் நாம ஏத்துக்கமாட்டோம்.. அவங்களுக்கு விஜய்னு ஒரு ஆப்ஷன் இருக்கிறதால பேசுறாங்க.. அவங்க என்ன முடிவும் எடுக்கலாம்.. நாம அதிகபட்சமா 30 சீட் வரை இறங்கிப் போகலாம் அவ்வளவுதான் நம்ம கிட்ட இருக்கிற ஒரே ஆப்ஷன்”னு சொன்னாரு..

அதே மாதிரி, ‘காங்கிரஸ்- விஜய் கூட்டணி அமைஞ்சா மைனாரிட்டி ஓட்டு நமக்கு வராதுன்னும் சொல்லுவாங்க.. இப்ப பார்லிமெண்ட் எலக்‌ஷன் நடக்கலையே.. இந்த தேர்தலைப் பொறுத்தவரைக்கும் மைனாரிட்டி ஓட்டு நம்மை விட்டும் போகாது”ன்னும் சிஎம் அழுத்தமாகவே சொன்னாரு..

இதுக்கு இடையிலதான டெல்லியில சிபிஐ விசாரணைக்கு போயிருக்கிற விஜய்கூட பேச்சுவார்த்தை நடத்தலாம்னு காங்கிரஸுல ஒரு குரூப் மூவ் செஞ்சிருக்கு.. ராகுல் கிட்டயும் இதை பத்தி டிஸ்கஷன் செஞ்சிருக்காங்க.. ஆனாலும் ‘ராகுல் இப்ப பேச வேண்டாம்.. பொறுங்க’ன்னு சொல்லியிருக்காருன்னும் ஒரு தகவல் சிஎம்-க்கு வந்துச்சு..

அதனால காங்கிரஸுக்கு ‘செக்’ வைக்க மினிஸ்டர் ஐ.பி. மூலமா, ‘கூட்டணி ஆட்சியே கிடையாதுங்கிறதுதான் சிஎம் நிலைப்பாடு’ன்னு டிக்ளேர் செய்ய சொல்லப்பட்டது” என்கின்றனர்.

அதேநேரத்துல திமுக- காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக நீடிக்கனும்னு நினைக்கிற ரெண்டு கட்சிகளோட சீனியர்ஸும், “ இவ்வளவு தூரம் பிரச்சனையாகிருக்க வேண்டியது இல்லை.. இப்பவும் கூட ரெண்டு தலைவர்களும் உட்கார்ந்து ஒரு சிட்டிங் பேசினாலே எல்லாமே சுமூகமாக முடிஞ்சிடுமே”ன்னு சொல்றாங்க..

ஓஹோ.. ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வர்றாரே..

ஆமாய்யா.. நீலகிரி கூடலூரில ஒரு தனியார் ஸ்கூல் பங்ஷனில கலந்துக்க வர்றாரு.. அதை முடிச்சுட்டு அப்படியே கேரளாவுக்கு போறாரு.. இப்ப வரைக்கும் பெருசா இல்லைன்னாலும் திமுக சைடுல யாரும் சந்திச்சு பேசுவாங்களான்னும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துகிட்டு இருக்கு..

சரி… தேமுதிகவும் கூட்டணியை அறிவிக்கல.. ராமதாஸும் இங்கிட்டும் அங்கிட்டும்னு பேசிகிட்டு இருக்காரே.. என்னவாம்?

கடலூரில தேமுதிக மாநாட்டுலதான் கூட்டணியை பத்தி அறிவிப்பேன்னு பிரேமலதா பல மாசமா சொல்லிகிட்டே இருந்தாங்க.. மாநாட்டுலயும் கூட ‘கூட்டணியை பத்தி முடிவு செஞ்சுட்டோம்..ஆனா இப்ப சொல்லமாட்டோம்’னு சஸ்பென்ஸ் வெச்சாங்க பிரேமலதா…

இதே மாதிரி ராமதாஸ், பாஜக கூட்டணியில இருக்கிற மாதிரியும் பேசுறாரு.. பரமக்குடியில மினிஸ்டர் ராஜ கண்ணப்பனோ, திமுககூட ராமதாஸ் பேசிகிட்டுதான் இருக்காருன்னு சொல்லி இருக்காரு..

தேமுதிக, ராமதாஸ் பாமக இப்படி ஏன் குழப்புதுன்னு அந்த கட்சிகளோட சோர்ஸ்களிடம் பேசுனோம்.. தேமுதிகவுல என்ன சொல்றாங்கன்னா, “நாங்க ரெண்டு பக்கமும் பேசுறோம்தான்.. இதைத்தான் கடலூர் மாநாட்டுலயும் ஓபனாகவே சொன்னோமே.. ஆனா காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும்னு திமுக வெயிட் பண்ணுது.. அதனால எங்களையும் வெயிட் பண்ண சொல்லியிருக்காங்க.. நாங்களும் சரின்னு கூட்டணி முடிவை அறிவிக்கிறதை தள்ளி வெச்சிருக்கிறோம்”னு சொல்றாங்க..

ராமதாஸ் முடிவு பத்தி தைலாபுரம் தோட்டத்துல விசாரிச்சப்ப, ”பாஜக சைடுல இருந்தும் அய்யாகிட்ட பேசுகிட்டுதான் இருந்தாங்க.. ஆனா இப்ப வெயிட் பண்ண சொல்றாங்க.. கான்டாக்ட்டும் கட் ஆகிட்டு வருது.. எல்லாத்துக்குமே அன்புமணிதான் காரணம்.. எடப்பாடி கூட பேச்சுவார்த்தை நடத்துன அன்புமணி, அய்யாவை கூட்டணியில சேர்த்துக்கவே கூடாதுன்னு நிபந்தனையாகவே போட்டுருக்கிறாராம்.. அய்யா கூட்டணியில இருந்தா தொகுதிகளை ஒதுக்குறது, வேட்பாளர்களை அறிவிக்கிறதுன்னு எல்லாத்துலயும் குழப்பம் வருமுன்னு சொல்லி இருக்காரு அன்புமணி..

இந்த தகவலை அய்யாவுக்கும் சொல்லி அனுப்பிய எடப்பாடி, டெல்லிக்கும் பாஸ் செஞ்சிருக்காரு.. அய்யாவும்தான் கூட்டணியில இருக்கனும்னு மோடிஜி விரும்புறாரு.. ஆனா அன்புமணி முட்டுக்கட்டை போட்டு வெச்சிருக்காரு.. அதனாலதான் வெயிட் பண்ண சொல்லி இருக்காங்க..

அங்கிட்டு திமுக பக்கமும் பேச்சுவார்த்தை நடத்துறாங்க.. அவங்களும் கூட காங்கிரஸ் என்ன முடிவு எடுக்குதுன்னு பார்க்கலாம்னு சொல்றாங்க.. விஜய் கூட காங்கிரஸ் போச்சுன்னா கணிசமான சீட்டை திமுக தரும்னு நினைக்கிறோம்” என்கின்றனர்.

ஓஹோ.. ஆமா அன்புமணிக்கு அதிமுக எத்தனை சீட் தரப் போகுதாம்?

2021 தேர்தல்ல பாமகவுக்கு அதிமுக- பாஜக கூட்டணியில 23 சீட் கொடுத்தாங்க.. அதே சீட்டுகளை அன்புமணி கேட்டிருக்காரு.. ஆனா 18 சீட் வரைக்கும் ஓகே சொன்னதோட, ஒரு ராஜ்யசபா சீட்டையும் கன்பார்ம் செஞ்சிருக்காராம் அன்புமணி.

ஓஹோ.. மறுபடியும் எம்.பி. ஆகி மத்திய அமைச்சராகலாம்னு நினைக்கிறாரோ?

அய்யா..அவசரப்படாதீர்.. அவரு இந்த முறை ராஜ்யசபா சீட் கேட்டது தனக்கு இல்லையாம்.. மனைவி சவுமியாவுக்குதானாம்.. அன்புமணி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம்னு முடிவு செஞ்சிருக்காராம்..

இந்த தகவல் ராமதாஸ் கிடைச்சதும், “அப்ப அன்புமணிக்கு எதிராக ஸ்ரீகாந்தியை நிறுத்துவோம்.. எந்த தொகுதியாக இருந்தாலும் நிறுத்திடுவோம்”னு கோபமாக சொல்லி இருக்கிறார்.

அடடே.. புது தகவலா இருக்கே.. சரி ஓபிஎஸ் எந்த அணிக்கு போறதுன்னு முடிவு செஞ்சுட்டாரா?

ஓபிஎஸ்ஸும் ராமதாஸ், பிரேமலதா மாதிரி தத்தளிச்சுகிட்டுதான் இருக்காரு.. டெல்லிக்கு போன எடப்பாடி, அமித்ஷாகிட்ட பேசும் போது டிடிவி தினகரனை கூட்டணியில சேர்க்குறதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னதோடு ஓபிஎஸ்ஸை சேர்க்கவே கூடாதுன்னு அழுத்தமாகவே சொன்னாரு.. திமுகவோட சேர்ந்துகிட்டு கட்சியையே முடக்க பார்த்தவரு ஓபிஎஸ்.. அதிமுக ஆபீஸை உடைச்சு சீல் வைச்சு, சின்னத்தை முடக்க முயற்சி செஞ்சாரு.. இப்ப அவரை நாம சேர்த்துகிட்டாலும் திமுகவோட சேர்ந்துகிட்டுதான் அதே மாதிரி சதி வேலைகளைத்தான் செய்வாரு.. அதனால அவரை சேர்க்கவே கூடாதுன்னு சொல்லி கதவை சாத்த சொல்லிட்டாரு எடப்பாடி..

ஓபிஎஸ்-க்கு இருக்கிற ரெண்டு ஆப்ஷனில கவுரவமா இருக்கும்னு நினைக்கிறது திமுக கூட்டணிதான்.. ஆனால் திமுகவில இருந்து வர்ற பதில்கள்தான் ஓபிஎஸ்ஸை அப்செட் ஆக்கிடுச்சாம்..

ஓபிஎஸ் தரப்புல நாம பேசுனப்ப, “திமுக கூட்டணியில சேர்த்துக்கிறோம்னு சொல்லி இருக்காங்க.. ஆனால் அண்ணனுக்கும் வைத்திலிங்கத்துக்கும் சேர்த்து 2 சீட் கொடுக்கிறோம்னு சொன்னாங்க.. அண்ணன் ரொம்பவே அப்செட் ஆகிட்டாரு.. அப்புறம் சிஎம் ஸ்டாலின்கிட்டயும் அண்ணன் போனில் பேசுனாரு.. அதுக்கும் கூட, “ஆமாங்கண்ணே… உங்க கூட இருந்தவங்க எல்லாம் போயிட்டாங்க.. நீங்க ரெண்டு பேரு மட்டும்தானே”ன்னும் சொல்லிட்டதால என்ன செய்யுறதுன்னு ரொம்பவே குழப்பமா இருக்கிறாரு அண்ணன்” என்கின்றனர்.

அப்படியா? ஓபிஎஸ் நிலையை பார்த்து இபிஎஸ் ஹேப்பியாகிருப்பாரே?

இருக்காதா.. திமுக கூட்டணியில ஓபிஎஸ்-க்கு 2 சீட்டுதான்னு சொல்ற தகவல் எடப்பாடிக்கு போனப்ப, “சீக்கிரமா அவரு திமுக கூட்டணிக்கு போறதுதான் நல்லது.. நமக்கும் பாஜக பிரஸ்ஸர் கொடுக்காது.. அவரு பின்னாடி இருக்கிறதா சொல்ற தொண்டர்கள் யாரும் திமுகவுக்கு போகமாட்டாங்க.. திரும்பவும் நம்மகிட்டே வந்துடுவாங்கன்னு” சொல்லி இருக்கிறார் என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share