நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக எப்போதும் கூட்டணிக்கு வாங்க என கூப்பிடவே இல்லை என திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தெரிவித்தார். DMK TVK
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நேற்று ஜூலை 4-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், திமுக- பாஜகவுடன் எப்போதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ தவெக கூட்டணி வைத்துக் கொள்ளாது என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று ஜூலை 5-ந் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் விஜய் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, ‘விஜய் கட்சியை கூட்டணிக்கு வாங்கன்னு திமுக கூப்பிடவே இல்லையே’ என கிண்டலாக பதிலளித்தார்.