ADVERTISEMENT

கரூரில் செப்.17-ல் திமுக முப்பெரும் விழா: கனிமொழி எம்.பி.க்கு ‘பெரியார்’ விருது!

Published On:

| By Mathi

DMK Periyar Award Kanimozhi

திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பிக்கு, திமுகவின் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

தி.மு.க தொடங்கப்பட்ட நாள் செப்டம்பர்.17, தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 மற்றும் தந்தை பெரியார் பிறந்தாள் செப்டம்பர் 17 என மூன்றையும் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் திமுகவின் சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

2025ஆம் ஆண்டுக்கான திமுகவின் முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17-ந் தேதி கரூரில் நடைபெறுகிறது.

இந்த முப்பெரும் விழாவில் ஆண்டுதோறும் திமுக சார்பில் வழங்கப்படும் விருதுகள் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பெரியார் விருது- தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி

அண்ணா விருது– தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் – பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமன்

ADVERTISEMENT

கலைஞர் விருது- நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. இராமச்சந்திரன்

பாவேந்தர் விருது- திமுக மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன்

பேராசிரியர் விருது-திமுக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொறடாவுமான மருதூர் இராமலிங்கம்

மு.க.ஸ்டாலின் விருது- ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share