கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் விருது கனிமொழி எம்.பி.க்கும், முரசொலி அறக்கட்டளையின் ‘முரசொலி செல்வம்’ விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கும் வழங்கப்பட்டது.
கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் பெற்றோர் விவரம்: பெரியார் விருது- தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவருமான கனிமொழி
அண்ணா விருது-சுப.சீத்தாராமன்
கலைஞர் விருது- நூற்றாண்டு கண்ட சோ.மா.இராமச்சந்திரன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது- குளித்தலை சிவராமன்
பேராசிரியர் விருது- மருதூர் இராமலிங்கம்
மு.க.ஸ்டாலின் விருது-பொங்கலூர் நா. பழனிசாமி
இந்த விருதுகளை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
ஏ.எஸ். பன்னீர்செல்வனுக்கு முரசொலி செல்வம் விருது
‘முரசொலி’ அறக்கட்டளை சார்பாக ‘முரசொலி செல்வம்’ பெயரிலான முதல் விருது மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு வழங்கப்பட்டது. ஏ.எஸ். பன்னீர்செல்வன் குறித்த அறிமுக உரையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு பத்திரம், விருது வழங்கி சிறப்பித்தார்.
முப்பெரும் விழாவில் திமுகவில் சிறப்பாகப் பணியாற்றிய 16 நிர்வாகிகளுக்கும் விருதுகளும் பணமுடிப்பும் வழங்கப்பட்டன.
–