திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 4) கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகையும் இன்று (04-03-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் தமிழ்நாட்டில் 28 (இருபத்தெட்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
