திமுக- காங்கிரஸ் உடன்பாடு.. ப.சிதம்பரம் மகிழ்ச்சி- பாராட்டு

Published On:

| By Mathi

DMK Congress Chidambaram

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “தி மு க – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை முடிந்து தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களுக்கு என் பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என சோனியா காந்தி மற்றும் கார்கேவிடம் நேரில் வலியுறுத்தி இருந்தார் ப.சிதம்பரம். இதன் பின்னரே சோனியாவும் கார்கேவும் முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினர்.

மேலும், திமுக 25 இடங்களை தர முன்வந்தது; காங்கிரஸ் 30 இடங்கள்தான் வேண்டும் என அடம்பிடித்தது. இதனால் இரு கட்சிகளிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர ப.சிதம்பரத்தை சோனியா, ராகுல் காந்தி களமிறக்கினர்.

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளில் காங்கிரஸுக்கு கூடுதலாக 3 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. இதனையடுத்தே நேற்று திமுக- காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share