திமுக- காங்கிரஸ் கூட்டணி.. கார்கேவை கலாய்த்த நிர்மலா சீதாராமன்

Published On:

| By Mathi

Nirmala Sitharaman

திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது பேசுபொருளானது.

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது: தம்பிதுரை, மக்களவையின் துணை சபாநாயகராக இருந்த சீனியர் உறுப்பினர். அவர் சொன்ன விஷயத்தை மதிக்கிறேன்.. கூட்டணியில் இருப்பதால்தான் இப்படிப் பேசுகிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ADVERTISEMENT

அப்படியானால், மல்லிகார்ஜுன் கார்கே திமுகவுக்காக ஏன் எழுந்து நிற்கிறார்? அதுவும் கூட்டணிதானே?

தம்பிதுரை எழுந்து நின்ற உடனேயே, அவருடைய கருத்துக்களைக் கேட்பதற்காக நான் அமர்ந்துவிட்டேன். அதனால் நான் அவருக்கு மரியாதை கொடுக்கிறேன்.

ADVERTISEMENT

ஆனால், நாங்கள் கூட்டணியில் இருப்பதால்தான் இப்படிப் பேசுகிறோம் என்று மறைமுகமாகக் குற்றம் சாட்டுகிறீர்கள்.. காங்கிரஸ்-திமுகவும் கூட்டணிதானே வைத்திருக்கிறது.

ஓ… அதுவும் இப்போது சந்தேகத்தில் இருக்கிறதா? காங்கிரஸுக்கே தாங்கள் தி.மு.க கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பது இன்னும் உறுதியாக தெரியலையோ.. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share