‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என கரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதியேற்றார்.
கரூரில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இந்த பெருவிழாவின் இறுதியாக, ” இந்த கரூர் மண்ணில் நின்று..தந்தை பெரியார் பிறநத நாளில் உரக்க சொல்வோம்.. ‘தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்’… டெல்லிக்கு கேக்குற மாதிரி எல்லோரும் சேர்ந்து சொல்லனும்..என சொல்லிவிட்டு,
“தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்
தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்
தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன்” என 3 முறை உரத்து சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.
முப்பெரும் விழாவில் பங்கேற்ற திமுக தொண்டர்களும், இதே முழக்கத்தை விண்ணதிர உரத்து முழங்கினர்.
இதன் பின்னர், ” தமிழ்நாடு போராடும்- தமிழ்நாடு வெல்லும்- தமிழ்நாடு போராடும்- தமிழ்நாடு வெல்லும்” என 2 முறை உரத்து முழங்கி தமது உரையை நிறைவு செய்தார் முதல்வர் ஸ்டாலின்.