டிஜிட்டல் திண்ணை: நாளை திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு… ஸ்டாலின் லிஸ்ட் ரெடியானது எப்படி?

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும், “இனிமேதான் ஆட்டமே ஆரம்பம் போல”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. வேட்பாளர்களை எந்த கட்சி அறிவிக்க போகுது?

ADVERTISEMENT

அதிமுக ஏற்கனவே 23 பேரை அறிவிச்சிருச்சு.. திமுகவும் நாளைக்கு முதல் கட்ட வேட்பாளர்களை அறிவிக்க போகுது..

வேட்பாளர்களை ஸ்டாலின் ரொம்ப கவனமாவே செலக்ட் செய்யுறாருன்னு நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம் இல்லையா?

ADVERTISEMENT

10 நாட்களுக்கு முன்னாடி மா.செ.க்கள் கூட்டத்துல ஸ்டாலின் பேசுனப்பவும், “ வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

அவரை பிடித்தால் சீட் கிடைக்கும், இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என நேரத்தையும் உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம் “மக்களுக்கு பிடித்தவர்களுக்கு “ மட்டுமே இம்முறை சீட்”னும் சொல்லி இருந்தாரு..

ADVERTISEMENT

திமுக வேட்பாளர்களை ஸ்டாலின் எப்படி தேர்வு செய்யுறாருன்னு அவருக்கு நெருக்கமானவங்ககிட்ட நாம பேசுனப்ப, மா.செ.க்கள்கிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பேரை கொடுங்கன்னு ஸ்டாலின் கேட்டு வாங்கினாரு..

அதே மாதிரி மண்டலப் பொறுப்பாளர்கள்கிட்டேயும் தொகுதிக்கு 3 பேருன்னு லிஸ்ட் வாங்கினாரு..

இவங்க இல்லாம PEN டீமும் தொகுதிக்கு 3 பேர் லிஸ்ட்டை கொடுத்தது..

மா.செ.க்கள், மண்டல பொறுப்பாளர்கள், PNE டீம் ரிப்போர்ட்டு மட்டும் இல்லாம உளவுத்துறைகிட்டேயும் ஒரு தொகுதிக்கு 3 பேருன்னு லிஸ்ட் வாங்கினாரு.. ஆக ஒரு தொகுதிக்கு 4 மெத்தேட்ல மொத்தம் 12 பேரை கையில வெச்சுகிட்டுதான் செலக்‌ஷன் பிராசஸையே ஆரம்பிச்சார் ஸ்டாலின்..

இதுல ஸ்டாலின்கிட்ட மண்டலப் பொறுப்பாளர்கள் என்ன சொல்றாங்களாம், ”மாவட்டச் செயலாளர் கொடுக்கிற லிஸ்ட்டை எல்லாம் பார்க்காதீங்க தலைவரே.. ஏன்னா பொதுவாக எல்லா மா.செ.க்களும் எலக்‌ஷன்ல நிக்கிறாங்க.. டாமினேட் ஜாதியா இருந்தா மந்திரியாகனும்னு நினைக்கிறாங்க.. அதனால தன்னோட தொகுதியில இன்னொருத்தன் பெரிய ஆளா வந்துடக் கூடாதுன்னு டம்மியான ஒரு ஆளையோ அல்லது பெண் வேட்பாளரையோ அல்லது கூட்டணி கட்சிக்கு கொடுங்கன்னோ எழுதி கொடுத்திருப்பாங்க..

அதனால மா.செ.க்கள் லிஸ்ட்டை கன்சிடர் பண்ணாதீங்க.. ஏன்னா நாளைக்கு அந்த தொகுதியில நாம ஜெயிக்காம போயிட்டா மண்டலப் பொறுப்பாளர் அப்படிங்கிறதால எங்களைத்தான் நீங்க கேட்பீங்க.. நாங்கதான் பொறுப்பு ஏத்துக்கனும்.. அதனால நாங்க கொடுக்கிற லிஸ்ட்டையே கன்சிடர் பண்ணுங்க தலைவரே”ன்னு சொல்லி இருந்தாங்க..

இத்தனையையும் கால்குலேஷன் பண்ணிட்டுதான் கேண்டிடேட்டை டிசைட் செஞ்சிருக்காரு ஸ்டாலின்.

முதல் கட்டமா நாளைக்கு காலையில கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை பைனல் பண்ணி அறிவிச்சுடுவாங்க..அதுக்கு அப்புறமா நாளைக்கு மாலையில முதல் கட்டமா ஒரு வேட்பாளர் பட்டியல் வெளியாகுது..

இந்த லிஸ்ட்டை ரிலீஸ் செஞ்சுட்டு,, நாளை மறுநாள் உதயநிதியை பிரசாரத்துக்கு புறப்பட சொல்லி இருக்கிறாரு ஸ்டாலின்..

ஏப்ரல் 2-ந் தேதி திருவாரூரில் இருந்து சிஎம் பிரசாரத்தை தொடங்குவாரு.. ஏப்ரல் 6-ந் தேதி நாமினேஷன் பைல் பண்றாரு”ன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share