திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் 4 பேர் முஸ்ளிம்கள்.
1) ஆவடி- சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை- அப்துல் வஹாப்
3) ராமநாதபுரம்- காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
4) செஞ்சி- கே.எஸ். மஸ்தான்;
ஆனால் அதிமுக அறிவித்த 150 வேட்பாளர்களில் பாளையங்கோட்டை தொகுதியில் எஸ். செய்யது சுல்தான் சம்சுதீன் என்ற ஒரே ஒரு இஸ்லாமியருக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேலும் திமுக கூட்டணியில்
முஸ்லிம் லீக்- 2
மமக -2
மஜக- 1
எஸ்டிபிஐ- 1
என முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டுமே 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் திமுக வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள் , பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமூகங்களுக்கும் உரிய பிரதித்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களில் 60-க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். 18 பேர் பெண்கள்.
பட்டதாரிகள் 125; மருத்துவர்கள் 15 பேர்; பொறியாளர்கள் 17 பேர்; வழக்கறிஞர்கள் 29 பேர். முனைவர்கள் 7 பேர்
164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். 80% படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக.
