தமிழ்நாடு – புதுச்சேரி தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் எப்போது?

Published On:

| By Pandeeswari Gurusamy

Two drastic changes in DMK

தமிழகம் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் வரும் மார்ச் 17ம் தேதி முதல் 22 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம்தேதி ஒரே கட்டமான தேர்தல் நடைபெறும் என்றும் மே 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் இன்று (மார்ச் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாடு – புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை தலைவர் 17-03-2026 முதல் 22-03-2026ஆம் தேதி வரை,மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்கள்.

குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையும் ‘அவர்களுக்காக விருப்ப மனு’ செலுத்தியோரையும் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
மாவட்ட வாரியான நேர்காணல் நடைபெறும் நாள் விபரம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share