வைஃபை ஆன் செய்ததும், “இப்படி எல்லாமா நெருக்கடி வரும்”? என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எந்த கட்சிக்கு நெருக்கடி வந்துருக்கு?
தேர்தல் நேரத்துல நெருக்கடியை சந்திக்காத கட்சிதான் உண்டா? தலைவர்கள்தான் உண்டா? நடக்கிறதை சொல்றேன்..
திமுக கூட்டணியில ரொம்பவே போக்கு காட்டிய காங்கிரஸை ஒரு வழியாக சமாளிச்சு ஒப்பந்தம் போட்டு முடிச்சாரு சிஎம் ஸ்டாலின்..
இதுக்கு அப்புறமா மதிமுகவுக்கு 4 சீட் கொடுத்து சுமூகமா கையெழுத்தாகிடுச்சு.. மிச்சம் இருக்கிற 20 இடங்களை விசிக, சிபிஎம், சிபிஐக்கு கொடுக்கிறதுலதான் இப்ப முட்டுக்கட்டையாம்..
இதை பத்தி திமுக பேச்சுவார்த்தை குழுவுல இருக்கிற சீனியர்கிட்ட பேசுனப்ப, “சிபிஐகிட்ட கூட்டணியில இருக்கிற நெருக்கடியை சொல்லி ”போன முறை 6 சீட் கொடுத்தோம்… 2 சீட்தான் ஜெயிச்சீங்க.. இருந்தாலும் இப்ப 5 இடங்கள் தர்றோம்.. ஜெயிக்க வைக்கிறது எங்க பொறுப்புன்னு” சொன்னோம்.. அவங்களும் கூட ஓகே நிலைமையிலதான் இருந்தாங்க..
ஆனா சிபிஎம் லீடர்ஸ்தான், “நீங்க ஏன் 5 சீட்டுக்கு ஒப்புகிட்டீங்க? எங்களுக்கும் 5 சீட்தான்னு சொல்வாங்களே”ன்னு ஆதங்கப்பட்டிருக்காங்க..
சிபிஎம் லீடர்ஸ்கிட்டேயும் நாங்க நிலவரத்தை சொல்லி, “எங்களுடைய நம்பர்ஸையும் குறைச்சிருக்கோம்.. நீங்களும் ஒரு இடத்தை மட்டும் குறைச்சுக்கங்கன்னு சொன்னோம்.. ஆனா சிபிஎம்-ல் இருக்கிற பெ.சண்முகம்தான் கூடுதலா இடம் தரனும்னு ரொம்பவே உறுதியா இருக்கிறாரு..
இதுல சிஎம் ஸ்டாலினுக்கு ரொம்ப வருத்தம்தான்.. திருமாவளவன், சிஎம்மை சந்திச்சு பேசியிருந்தாரு.. அப்ப திருமாகிட்ட, “திருமா நீங்க என் இடத்துல இருந்து பாருங்க.. ரொம்பவே நெருக்கடி கொடுத்தது காங்கிரஸ்.. அவங்க போனா போகட்டும்னு முடிவெடுக்கிற சூழ்நிலை கூட இருந்துச்சு.. அந்த நெருக்கடியில 3 சீட்தான் கூட கொடுத்திருக்கோம்..
நம்ம கூட்டணியில இப்ப தேமுதிக, கமல் மநீம எல்லாம் வந்து சேர்ந்திருக்காங்க.. எங்க நம்பர்ஸையே நாங்க குறைச்சிருக்கிறோம்.. இதை சொல்லியும் சிபிஎம் சண்முகம் ரொம்ப பிடிவாதமா இருக்கிறாரே.. அவர்கிட்ட பேசும் போது நான் ரொம்ப ஃபீல் பண்ணேன்னு சொல்லுங்க”ன்னு ஆதங்கப்பட்டார்” என்கின்றனர்.
அதாவது சொந்த கட்சிக்கு கூடுதல் சீட் கேட்டு தன்னை பார்க்க வந்த திருமாவளவனை, சீட்டுக்காக மல்லுக்கட்டும் இன்னொரு கூட்டணி கட்சியை சமாதானப்படுத்துற பொறுப்பை கொடுத்து அனுப்பிட்டாரு சிஎம் ஸ்டாலின்..
தவாக வேல்முருகனும் வேற டோன்ல பேசுற மாதிரி இருக்கே?
ஆமாய்யா.. திமுக கூட்டணியில நீடிக்கனுமா? மறுபரிசீலனை செய்யுமான்னு வேல்முருகன் தவாக தீர்மானமும் போட்டுச்சு.. ‘எங்களுக்கு தொகுதி முக்கியம் இல்லை.. கோரிக்கைகளை நிறைவேத்துறதா வாக்குறுதி கொடுங்க’ன்னும் ஒரு டோன்ல வேல்முருகன் பிரஸ்ல சொல்லி இருந்தாரு..
இதை பத்தி வேல்முருகன் தரப்புல பேசுனப்ப, “நாடாளுமன்ற தேர்தல்ல ஒரு இடம் கூட தரலை.. அசெம்பிளி எலக்ஷன் வரட்டும், லோக்கல் பாடி வரட்டும்னு சொல்றாங்க.. ஒரே ஒரு சீட்டை மட்டும் கொடுத்தா எப்படி சரியா வரும்? அப்ப சின்ன சின்ன கட்சிகளும் நாங்களும் ஒன்னா? எங்களை அன்புமணியும் கூப்பிடுறாரு.. டாக்டர் ராமதாஸும் கூப்பிடுறாரு.. அதனால எங்களுக்கு கூடுதலா இடங்களை கொடுங்கன்னு கேட்டிருக்கிறோம்..” என்கின்றனர்.
அதே நேரத்துல திமுக தரப்புல பேசுனப்ப, “வேல்முருகன் ஆதங்கத்தை சொல்றாருதான்.. அவரு சொல்ற மாதிரி சிங்கிள் டிஜிட் சீட் வாங்குன கட்சி எம்.எல்.ஏக்களை ஒப்பிடும் போது வேல்முருகனுக்கு பொதுக் கணக்குழு தலைவர் பதவி கொடுத்தோம்.. அவருக்கு அரசு மரியாதை, போலீஸ் பாதுகாப்புன்னு எல்லாம் தந்தோம்தானே.. அவருக்கான மரியாதையை நாம கொடுத்துட்டுதான் இருக்கோம்.. உள்ளாட்சி தேர்தல் வரும்போது சேர்மன் போஸ்டிங்ஸ் எல்லாம் நிறைய வரும்.. பார்த்துக்கலாம்னு சொல்லி இருக்கிறோம்.. வேல்முருகனை கன்வீன்ஸ் பண்ணிடுவோம்”னு சொல்றாங்கய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
