திமுக கூட்டணி தொகுதி பங்கீடு: 10 மணிநேரத்துக்கு மேல் நள்ளிரவிலும் நடந்த சிபிஎம் ஆலோசனை!

Published On:

| By Mathi

CPM DMK Alliance

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் மாநில அவசர செயற்குழு கூட்டம் சுமார் 10 ம்ணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.

2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட சிபிஎம் 2-ல் வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்க திமுக முன்வந்தது.

ADVERTISEMENT

ஆனால் சிபிஎம் இதனை ஏற்கவில்லை. கடந்த முறை போட்டியிட்டதைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் போட்டியிட்ட 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்பது சிபிஎம் நிலைப்பாடு.

இதனை திமுக ஏற்க மறுத்து வருகிறது. இதனையடுத்து சிபிஎம் கட்சியின் அகில் இந்திய பொதுச்செயலாளர் ஏ.எம். பேபி நேற்று சென்னை வந்தார். சென்னையில் சிபிஎம் கட்சியின் மாநில அவசர செயற்குழு நேற்று பகலில் 4 மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னர் மாலை 3 மணி முதல் நள்ளிரவைத் தாண்டியும் சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

சிபிஎம் பொதுச்செயலாளர் பேபியைப் பொறுத்தவரையில், திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அதனால் திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்க வேண்டும் என்கிறார். இதை நாம் நேற்று டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.

ஆனால், “2021 தேர்தலின் போது அடுத்த தேர்தலில் பார்த்து கொள்ளலாம் என்று சொல்லிதான் 6 தொகுதிகளைக் கொடுத்தார்கள். இந்த முறை 5 தொகுதிகள்தான் என குறைப்பது எப்படி சரியாகும்? “ என்கின்றனர்.

ADVERTISEMENT

இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சிபிஎம் பொதுச்செயலாளர் ஏ.எம். பேபியை சந்தித்து பேசினார். அப்போது, திமுக கூட்டணியில் சிபிஎம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக தரும் 5 தொகுதிகளை ஏற்க மறுத்து சில தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது; இதர தொகுதிகளில் திமுகவை ஆதரிப்பது என்கிற நிலைப்பாட்டை எடுக்கலாமா என்பது குறித்தும் சிபிஎம் அவசர செயற்குழுவில் நேற்று விவாதிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share