தீபாவளி பண்டிக்கைக்காக அக்டோபர் 17-ந் தேதி ரயில் பயணத்துக்கான முன்பதிவு சில நிமிடங்களிலேயெ விற்பனையாகின.
தீபாவளி பண்டிக்கைக்கான தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 17-ந் தேதி ரயில் பயணம் மேற்கொள்வதற்காக இன்று ஆகஸ்ட் 18-ந் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.
ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்ட ரயில்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்பனையாகிவிட்டன.
அக்டோபர் 18-ந் தேதிக்கு நாளையும், அக்டோபர் 19-ந் தேதிக்கு நாளை மறுநாளும் முன்பதிவு செய்யலாம்.