விஜய்- திரிஷா.. வைரலான இயக்குநர் அமீர் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்!

Published On:

| By Mathi

Ameer Vijay Trisha

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா விவகாரம் குறித்து இயக்குநர் அமீர், விஜய் பெயரைக் குறிப்பிடாமல் முன்வைத்துள்ள விமர்சனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் நடிகை ஒருவருடனான தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளார் சங்கீதா.

ADVERTISEMENT

விஜய்க்கும் நடிகை திரிஷாவுக்குமான உறவை முன்வைத்தே சங்கீதா விவகாரத்து கோரியிருப்பதை நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் “விவாகரத்து கேட்கும் விஜய் மனைவி.. அம்பலமான திரிஷா உறவு.. பனையூரில் நடந்தது என்ன?” என விரிவாக எழுதியிருந்தோம்.

இதனிடையே சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விஜய்- திரிஷா இருவரும் ஒரே காரில் ஒரே நிற உடையில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

ADVERTISEMENT

விஜய்- திரிஷா இருவரும் ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய்யை தீவிரமாக ஆதரித்த அவரது ரசிகர்கள் , தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் மிகவும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே இயக்குநர் அமீர் வைத்திருப்பதாக சொல்லப்படும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அதில், “ தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருக்கிறார்.. மனைவி, மகளை வீட்டில் இருந்து விரட்டி விட்டு ‘மகளிர் தின விழா’ கொண்டாடுவதா? என விஜய்- திரிஷா பெயரை சொல்லாமல் கடுமையாக விமர்சித்துள்ளார் அமீர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share