வைஃபை ஆன் செய்ததும், “அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே…”என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஒரே உற்சாகமாக பாடுகிறீரு? என்ன சேதியாம்?
உமக்கு பலமுறை சொல்லிட்டேன்.. புயலோ, மழையோ, சந்தோஷமோ நமக்கு ஏதுய்யா.. நாம தகவலை மட்டும் சொல்லுவோம்..
சரிய்யா.. தேர்தலை பத்திதான் ஏதோ முக்கியமான விஷயம் போல.. பீடிகை பெரிசா இருக்கு..
யெஸ்.. நீரு சொல்றது சரிதான்.. திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தையில என்ன நடக்குதுன்னு விலாவாரியா சொல்றேன்..கேட்டுக்கய்யா.
”கூட்டணி ஆட்சி”ன்னு காங்கிரஸ் வெச்ச டிமாண்டை சிஎம் ஸ்டாலின் நிராகரிச்சுட்டாரு..
கிரவுண்ட்ல காங்கிரஸ்காரங்க, கூட்டணி ஆட்சியை பத்தி காரசாரமா பேச, திமுக MLA தளபதி பதிலடி கொடுத்திருந்தாரு.. MLA தளபதியோட பேச்சை ஒட்டுமொத்த திமுகவும் கொண்டாடுன நேரத்துல கூட்டணி பத்தி எல்லாம் பொதுவெளியில பேசாதீங்கன்னு அறிவாலயத்துல இருந்து அட்வைஸ் வந்துச்சு..

இந்த நிலையிலதான் டெல்லியில் ராகுல் காந்தியை கனிமொழி நேத்து சந்திச்சு பேசியிருக்காங்க..
அதுக்கு முன்னாடி சென்னையில சிஎம் ஸ்டாலின், சபரீசன், கனிமொழி எல்லாம் ஆலோசனை நடத்துனாங்க.. அதுல, ஆட்சியில பங்கு- அப்படிங்கிற டிமாண்டை ஏத்துக்கலைன்னு சொல்லிடுங்கன்னு கனிமொழிகிட்ட சிஎம் சொன்னாரு.. கார்கே கிட்ட ஏற்கனவே தாம் பேசுனது, ஓகே சொன்ன விவரங்களை சபரீசனும் விளக்கமான சொன்னாரு.. அப்புறமா, காங்கிரஸ் என்ன டிமாண்ட் வைக்கக் கூடும்? அதுக்கு என்ன பதில் சொல்லனும்னு டீட்டெய்லா 1 மணிநேரம் மூணு பேரும் ஆலோசனை நடத்தினாங்க..
ராகுல் காந்திகிட்ட கனிமொழி என்ன சொன்னாங்களாம்?
அதை சொல்றதுக்கு முன்னாடி, காங்கிரஸ் தரப்புல இப்ப என்னதான் நிலைமை?ன்னு நாம விசாரிச்சப்ப, “ஆட்சியில பங்கு இல்லைன்னு திமுக தெளிவாக சொல்லிடுச்சு சார் .. சரி.. அதுக்கு ஆல்டர்நேட்டிவ்வா என்ன என்ன ஆப்ஷன்ஸ் இருக்குன்னு பார்த்தாங்க..
தொகுதிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே டெல்லியில கார்கேவை சபரீசன் சந்திச்சு பேசுனப்ப எங்களுக்கு 28 இடங்கள் கொடுக்கலாம்னு ஒத்துகிட்டாரு..
ஆட்சியில பங்கு தரனும் அப்படிங்கிற எங்க டிமாண்டுக்கு திமுக இப்ப ஒத்துக்காத நிலையில
ஒரு பார்லிமெண்ட் தொகுதிக்கு 1 சட்டசபை தொகுதிங்குற கணக்குல மொத்தம் 39 சீட்
துணை சபாநாயகர் பதவி
2 ராஜ்யசபா சீட்
5 வாரியத் தலைவர்கள் பதவி
உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் இடங்கள்னு டிமாண்ட் வெச்சிருக்கோம்..
அதோட, ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காம போச்சுன்னா ‘ஆட்சியில பங்கு’தரனும்னும் சொல்லியிருக்கிறோம்.
இதுக்கு திமுக தரப்புல என்ன சொல்றாங்கன்னா, “துணை சபாநாயகர் பதவியை அப்படி காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் எப்படி கொடுக்க முடியும்?பார்லிமெண்ட்ல எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கிற வழக்கம் இருக்கலாம்.. ஆனா இங்க காங்கிரஸுக்கு து.சபா. பதவி கொடுத்தா கூட்டணியில இருக்கிற எல்லா கட்சிகளும் எதிர்பார்ப்பாங்கதானே.. அது எப்படி சரியா வரும்?னு தயக்கம் காட்டுறாங்க..
5 வாரியத் தலைவர் பதவிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கிட்டா மற்ற கூட்டணி கட்சிகளும் அதே மாதிரி கேட்பாங்கதானே?ன்னும் திமுக சைடுல சொல்றாங்க
அடுத்ததாக எங்க சைடுல இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி இருக்கோம்.. தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காம போனா ”ஆட்சியில பங்கு தரப்படும்”னு இப்பவே ஒப்பந்தம் போட்டுக்கலாமேன்னு சொன்னோம்..
அதுக்கு திமுகவோட பதில் என்னான்னா, “இப்பவே ஒப்பந்தம் போட்டுகிட்டா எங்களுக்கு மெஜாரிட்டியே கிடைக்கவிடாம உள்ளடி வேலைகள் நிறைய தொகுதிகளில்ல நடக்கவும் வாய்ப்பிருக்கு.. அதனாலதான் தேர்தலுக்கு முன்னாடி ஒப்பந்தம் எல்லாம் வேணாம்னு சொல்றாங்கான்னு தகவல் வந்திருக்கு” என்கின்றனர்.
இப்ப கனிமொழி- ராகுல் காந்தி சந்திப்பை பத்தி சொல்றேன்.. டெல்லியில சோனியா காந்தி வீட்டுலதான் ராகுல் காந்தியை கனிமொழி சந்திச்சு பேசுனாங்க.. அரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்துச்சு..

இதை பத்தி திமுக தரப்புல விசாரிச்சப்ப, “ராகுல் காந்தியோட கனிமொழியின் இந்த மீட்டிங் ரொம்ப Smooth ஆகத்தான் இருந்தது..
ஆட்சியில் பங்கு அப்படிங்கிறதை பத்திதான் முதல்ல டிஸ்கஷன் நடந்தது..
அப்ப, “தமிழ்நாட்டுல கூட்டணி ஆட்சிங்கிற கான்செப்ட்டை மக்கள் எப்பவும் ஏத்துக்கிறதே இல்லை.. 1984-ல் காங்கிரஸ் 73 இடங்களில் போட்டியிட்டு 61 தொகுதிகளில் ஜெயிச்சது.. அப்ப கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பும் இருந்துச்சு.. ஆனா தமிழகத்துல அரசியல் ரீதியாகவே கூட்டணி ஆட்சியை மக்கள் ஏத்துக்கிறது இல்லைங்கிறதாலே அதை பத்தி இங்கே யாரும் எப்போதும் பேசுறதும் இல்லை”ன்னு கனிமொழி ரொம்பவே விளக்கமாக சொன்னாங்க…
இதை உன்னிப்பாக கேட்டுகிட்ட ராகுல் காந்தி, “சரி.. கூட்டணி ஆட்சி”ங்கிற டிமாண்டை பத்தி நாங்க பேசலைன்னு ஒப்புக்கிட்டாரு..
அதே நேரத்துல, அதிக சீட், துணை சபாநாயகர் பதவி, ராஜ்யசபா சீட், வாரியத் தலைவர் பதவிகள், உள்ளாட்சியில் அதிக இடங்கள்னு மற்ற விஷயங்களை சொன்னாரு ராகுல் காந்தி.. இதை டிஸ்கஷன் செய்வோம்னு கனிமொழி சொல்லி இருக்காங்க..
இந்த சந்திப்புல கனிமொழி ஒரு முக்கியமான விஷயத்தை ராகுல் காந்திகிட்ட சொல்லி இருக்காங்க..
அதாவது, “2029 லோக்சபா எலக்ஷனில உங்களை பிரதமராக்கனும்தான் நாங்க எல்லா வேலையையும் செஞ்சுகிட்டு இருக்கோம்.. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியால நானும் பாதிக்கப்பட்டிருக்கேன்.. கட்சியும் பாதிக்கப்பட்டிருந்தது.. தலைவர் கலைஞர் அந்த டைம்ல ரொம்பவே கஷ்டப்பட்டாரு.. இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, மத்தியில காங்கிரஸ் ஆட்சிக்கு வரணும்.. நீங்க பிரதமராகனும்னு நாங்க வேலை செஞ்சுகிட்டு இருக்கிறோம்”னு கனிமொழி சொன்னாங்க.. இதை சந்தோஷமாக கேட்டுகிட்டாரு ராகுல்..
இப்போதைக்கு ஆட்சியில பங்குங்கிற டிமாண்டை காங்கிரஸ் கைவிட்டுருச்சுங்கிறதுதான் நல்ல தகவல் சார்.. மத்த டிமாண்ட்ஸ் பத்தி சீக்கிரமா பேச்சுவார்த்தை நடக்கும்” என்கின்றனர் என சொல்லியபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
