டிஜிட்டல் திண்ணை: திடீர் டிமாண்ட்.. அதிர்ந்த அறிவாலயம்..அதிரடி ரிப்ளை.. திமுக- காங். பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

Published On:

| By Mathi

DT DMK Congress Talks

வைஃபை ஆன் செய்ததும், “ஜனநாயகத் திருவிழா”ன்னு சும்மாவா சொல்றாங்க என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா எலக்‌ஷன் களைகட்டுதோ?

ADVERTISEMENT

ஆமாய்யா.. அதுவும் திமுகவோட அண்ணா அறிவாலயம் பக்கம் போகவே முடியலையே.. அவ்வளவு கூட்டம் குவிஞ்சு கிடக்கு..

திமுகவில தேர்தலில் போட்டியிட விரும்புறவங்க பிப்ரவரி 20-ந் தேதியில இருந்து விருப்ப மனு கொடுத்துட்டு இருக்காங்க.. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேர் ஆதரவாளர்கள் படையோடு அறிவாலயத்துல விருப்ப மனு கொடுக்கிறாங்க.. அதுவும் நல்ல நாளா இருந்துட்டா போதும்.. அறிவாலயம் இருக்கிற தேனாம்பேட்டை சிக்னல் பக்கம் போகவே கூடாதுங்கிற அளவுக்கு கூட்டம் அலை மோதுதுய்யா..

ADVERTISEMENT

இன்னொரு பக்கம், பிப்ரவரி 22-ந் தேதியில இருந்து கூட்டணி கட்சிகளோட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையும் அறிவாலயத்தில நடக்குது… ஒவ்வொரு கட்சி குழுவும் அவங்க கட்சிகாரர்களோடு வந்து பேசிட்டு போறாங்க..

இதை எல்லாம் பார்த்துட்டுதான் ‘ஜனநாயகத் திருவிழா’ன்னு சொன்னேன்..

ADVERTISEMENT

இதுல இன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட குழு பேச்சுவார்த்தைக்கு வந்ததால ரொம்பவே பரபரப்பா இருந்தது அறிவாலயம்..

திமுககிட்ட பேசுறதுக்கு காங்கிரஸ் கட்சி நவம்பர் மாசமே ஐவர் குழுவை அறிவிச்சது.. ஆனா அதுக்கு பிறகு மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவங்க ஆட்சியில பங்கு- அதிக தொகுதிகள் கொடுங்கன்னு பேசுனாங்க.. விஜய் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கனும்னு சொல்ல ஆரம்பிச்சாங்க..

டெல்லிக்கே தமிழக காங்கிரஸ் லீடர்ஸை வரவழைச்சு ராகுல் காந்தி- கார்கே ஆலோசனை நடத்தினாங்க.. திமுக சைடுல இருந்து கனிமொழி டெல்லிக்கு போய் ராகுல் காந்தியை பார்த்து பேசிட்டு வந்தாங்க.. ஆனாலும் திமுக- காங்கிரஸ் உறவுல சலசலப்பு அடங்கலை.. இதனால திமுக ரொம்பவே டென்ஷனாகிடுச்சு.. ஒரு கட்டத்துல திமுக- காங்கிரஸ் கூட்டணியே இருக்குமா?ன்னு கேள்விக்குறியும் ஆகிடுச்சு..

அப்புறமா ஸ்டாலின்கிட்ட சோனியா- கார்கே பேசுனாங்க.. வேணுகோபாலும் சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திச்சாரு.. அப்பவும் ஸ்டாலின் ரொம்பவே கடுமையா பேசிட்டாரு.. அதுக்கு பிறகு கிரிஷ் சோடங்கர், கனிமொழியை சந்திச்சு பேசிட்டு போனாரு..

இவ்வளவு ‘சம்பவங்கள்’ நடந்ததால இன்னைக்கு காங்கிரஸ் டீம் அறிவாலயத்துக்கு வந்தப்ப ஒரே பரபரப்பா ரொம்ப எதிர்பார்ப்பா இருந்தாங்க எல்லாரும்..

திமுகவில டிஆர் பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வே.லு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.ராசா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குழுவை காங்கிரஸ் குழு இன்னைக்கு சந்திச்சது..

காங்கிரஸில இருந்து கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் குழுதான் அறிவாலயத்துக்கு பேச்சுவார்த்தை வந்தது..

இந்த பேச்சுவார்த்தை முடிஞ்சதுக்கு பிறகு பிரஸ் மீட்டுல பேசுன கிரிஷ் சோடங்கர், ”எங்களுக்கான தொகுதிகள் லிஸ்ட் கொடுத்திருக்கிறோம்.. பேச்சுவார்த்தை சுமூகமா நடந்துச்சு”ன்னு சொன்னாரு..

செல்வப்பெருந்தகை, “ஒரு ராஜ்யசபா சீட்க்கு சிம் ஸ்டாலின் ஓகே சொல்லிட்டாரு.. இன்னைக்கு பேச்சுவார்த்தை சுமூகமா நடந்துச்சு.. எத்தனை தொகுதிகள்னு சொல்வோம்”னாரு..

சரிய்யா.. உள்ளே என்ன நடந்துச்சாம்?

காங்கிரஸ் குழுவோட இன்னைக்கு பேச்சுவார்த்தை நடக்கிறதுக்கு முன்னாடியே, திமுக குழுவுக்கு ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டா அட்வைஸ் பண்ணிட்டாராம். அதாவது, “காங்கிரஸ் குழு சொல்றதை அமைதியா மட்டும் கேட்டுக்குங்க.. நம்பஸ்ர்ஸ் உட்பட எந்த ஒரு விஷயத்தையும் சின்னதா கூட கமிட் பண்ணிடாதீங்க”ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லியிருந்தாராம்…

பேச்சுவார்த்தை குழுவுல இருந்தவங்ககிட்ட என்ன நடந்ததுன்னு விசாரிச்சப்ப, காங்கிரஸில் கிரிஷ் சோடங்கர்தான் பேச்சை ஆரம்பிச்சாரு.. அவரு, “ஆட்சியில பங்கு வேணும்னு.. அமைச்சரவையில இடம் தரனும்..

அப்புறமா, “1967-ல் ஆட்சியை இழந்த பிறகு 2006-லதான் எங்களுக்கு ஆட்சியில பங்கேற்க வாய்ப்பு கிடைச்சது. .ஆனா அன்னைக்கு கலைஞருக்காக நாங்க கேட்கலை.. சோனியாதான் ஆட்சியில பங்கு எல்லாம் கேட்க வேண்டாம்.. கலைஞரை தொந்தரவு செய்யாதீங்கன்னு சொல்லிட்டாங்க..

எங்க கட்சியை இங்கே வளர்க்கனும்னா 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுங்க..”ன்னு கிரிஷ் சோடங்கர் ரொம்பவே சீரியசா பேச, திமுக சைடுல இருந்து டிஆர் பாலு, நேரு, எ.வ.வேலு, ஆ.ராசான்னு எல்லாருமே “No.. No.. No..”ன்னு சொன்னபடியே தலையை ஆட்டியபடியே மறுத்துட்டாங்க..

அதோட, “எங்க பாலிசியே ஆட்சியில பங்கு இல்லைங்கிறதுதான்.. இங்க தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை எல்லாம் ஏத்துக்கவே மாட்டாங்க.. எங்க தலைவர் ஸ்டாலின் இதை வெளிப்படையாகவே சொல்லிட்டாரே..”ன்னு திமுக குழுவினர் பதில் சொன்னாங்க..

அப்ப கிரிஷ் சோடங்கர், “எங்க டிமாண்ட்ஸ் என்ன என்னன்னு சொல்றேன்”னு சொல்லிட்டு அடுத்ததாக ஒரு லிஸ்ட்டை படிச்சாரு.. அதுல, “உள்ளாட்சி அமைப்புகள்- கூட்டுறவு சங்க தேர்தல்களில்ல காங்கிரஸுக்கு 25% சீட் கொடுக்கனும்.. அதுக்காக இப்பவே ஒப்பந்தம் கையெழுத்து போடனும்”னு சொன்னாரு…

அப்புறமாக,39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1-ன்னு அப்படிங்கிற அடிப்படையில காங்கிரஸுக்கு இந்த தேர்தலில்ல 39 சீட் கொடுக்கனும்.. ராஜ்யசபா சீட் தரனும்” அப்படின்னும் கிரிஷ் சோடங்கர் சொன்னாரு.

திமுக சைடுல இருந்து, “இந்த எலக்‌ஷன்ல கூட்டணியில கமல்ஹாசனோட மநீம, தேமுதிகன்னு புதுசா கட்சிகள் வந்திருக்காங்க.. அதனால நாங்களே எங்க சீட்டை குறைக்கத்தான் போறோம்.. போன டைம் காங்கிரஸுக்கு 25 சீட் கொடுத்தோம்.. எல்லார்கிட்டேயும் சொல்ற மாதிரி நீங்களும் சீட்டை குறைச்சுக்குங்க.. 23 சீட்டுதான் தர முடியும்”னு சொல்ல..

காங்கிரஸ் குழு ஒருவிதமா சிரிச்சுகிட்டே,”அப்படின்னா எங்களுக்கு 35 சீட்டாவது கண்டிப்பாக கொடுங்க”ன்னு கேட்டது..

“சரிங்க.. இதை எங்க தலைவர்கிட்ட பேசிட்டு சொல்றோம்”னு திமுக குழு பதில் தந்தது..

இதுக்கு பிறகு வெளியே வந்த காங்கிரஸ் குழு, “நாம 30 சீட் வரைக்கும் கேட்டுப் பார்ப்போம்.. திமுக 27+1-க்கு வருவாங்க”ன்னு பேசிக் கொண்டனர்..

அறிவாலய சந்திப்பு முடிஞ்ச உடனேயே கிரிஷ் சோடங்கர் டெல்லிக்கு கிளம்பிட்டாரு.. ராகுலை சந்திச்சு என்ன நடந்துச்சுன்னு விலாவாரியா சொல்ல இருக்கிறாராம்..

இப்ப திமுக 23-ல் ஆரம்பிச்சிருக்கு.. காங்கிரஸ் 35-ல் நிக்குது.. அடுத்தடுத்து நடக்கிற பேச்சுல, திமுக ஏறுவதும் காங்கிரஸ் இறங்கி வருவதும்னு நடக்கும்.. திமுக 27+1- க்கு வந்தாலும் காங்கிரஸ் 2 ராஜ்யசபா சீட் கேட்குற முடிவில் இருக்காம்.. இப்ப 1 ராஜ்யசபா சீட் கன்பார்ம் ஆனதால அடுத்ததா 2028-ல் நடக்குற ராஜ்யசபா எலக்‌ஷன்ல ஒரு சீட் தாங்கன்னு காங்கிரஸ் கேட்க இருக்கிறதாம் என டைப் செய்தபடியே செண்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share