வைஃபை ஆன் செய்ததும் ‘இன்றைக்கு ஏன் இந்த ஏமாற்றமோ’ன்னுதான் பாடனும் போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா.. பாட்டையே மாற்றி பாடுறீரு?
நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்னுதான் பாடியிருப்பேன்.. சிச்சுவேசனுக்கு அதுவும் பொருந்தும்..
என்னய்யா.. மேட்டரையே சொல்லாமல் பேசிகிட்டு.. என்ன சிச்சுவேசனாம்?
தவெகவுல நேற்று காலையில் இருந்தே ஒரே பரபரப்பு.. சோசியல் மீடியாவுல மட்டுமில்ல மீடியாக்களிலும் டிரெண்டிங்காக ஆரம்பிச்சது திருச்செங்கோடு மேட்டர்..
ஓஹோ.. அருண்ராஜ் ‘சேதி’யா?
கரெக்டா பிடிச்சுட்டீரே.. தவெகவின் முதல் வேட்பாளராக திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜை அறிவிக்கப் போறாங்கன்னுதான் காலை முதலே ஒரே பரபரப்பு.. திருச்செங்கோட்டில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் சேர்ந்து அருண்ராஜை வேட்பாளராக அறிமுகம் செய்யப் போறாங்கன்னு திரும்புன பக்கமெல்லாம் சோசியல் மீடியாவுல போஸ்ட்..
இதைபற்றி நாமக்கல் தவெக நிர்வாகிகள் சிலரிடம் பேசுனப்ப, “எங்களுக்கும் அப்படித்தான் தகவல் சொன்னாங்க.. நாங்க கூட எல்லாருமே போஸ்ட் போடுறாங்கன்னு சோசியல் மீடியாவுல போட்டோம்..

அருண்ராஜ் சாரும் புஸ்ஸி அண்ணனும் அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு சேர்ந்தும் வந்தாங்க.. அதுவும் அருண்ராஜ் சார், பட்டு வேஷ்டி சட்டையில ஜெகஜோதியா வந்திறங்கினாரு.. ஆஹா.. நம்ம கிட்ட சொன்ன செய்தி கன்ஃபார்ம் போலதான்னு நினைச்சுகிட்டுதான் கூட்டத்துக்கு போனோம்.. நேத்து ஏகப்பட்ட மீடியாக்காரங்களும் வந்துட்டாங்க..
ஆனால் கூட்டம் நடக்க நடக்கத்தான் அப்படி எல்லாம் எதுவுமே இல்லைன்னு புரிஞ்சது.. புஸ்ஸி ஆனந்த் அண்ணனும் பேசும் போது, “திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் யாருன்னு தலைவர்தான் அறிவிப்பாரு.. வேட்பாளர் படிச்சவரா? என்ன செஞ்சிருக்காரு.. செய்வாருன்னு விசாரிச்சுட்டு அறிவிப்பாரு” என மேலோட்டமாக சொல்லிட்டுப் போனதால ஏமாற்றமா போச்சு” என்றனர்.
இதை பத்தி தவெக தலைமை அலுவலக வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “விருப்ப மனு வாங்கி வேட்பாளர்களை நேர்காணல் செஞ்சு அதுக்குப் பிறகுதான் தளபதி அறிவிப்பாரு.. புஸ்ஸி ஆனந்தும் கூட மா.செ.க்கள்கிட்ட பேசும் போது, தொகுதிக்கு குறைஞ்சது 5 கோடி ரூபாய் செலவு செய்யுற ஆளா இருந்தா சொல்லுப்பா.. போட்டுடலாம்னு ‘ஆள் புடிச்சுகிட்டு’தான் இருக்காரு.. இது புரியாமதான் யாரோ பரப்பி விட்டுட்டாங்க” என்கின்றனர்.
ஓஹோ.. அருண்ராஜ் ரியாக்சன் என்னவாம்?
திருச்செங்கோடு தவெக நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிக் கொண்டிருந்த போது அவரு சொன்னதுதான் உமக்கு பதில்யா.. “தளபதிகிட்ட ஒன் டூ ஒன் ரெகுலரா பேசுறவரு அருண்ராஜ் சார்.. தளபதி போற போக்குல சொன்னதை அவரு சீரியசா எடுத்துகிட்டதால வந்த குழப்பமா? இல்லை தளபதி ஓகே சொல்லியும் புஸ்ஸி மாதிரி ஆட்கள் தடுத்துட்டாங்களோ?ன்னும் தெரியலை” என சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுகு போனது வாட்ஸ் அப்.
