டிஜிட்டல் திண்ணை:.. திருமா முடிவு- ஸ்டாலின் சொன்ன யோசனை.. ராமதாஸுக்கு விஜய் சொன்ன பதில்!

Published On:

| By Mathi

DT Ramadoss PMK

வைஃபை ஆன் செய்ததும், ”நித்தம் நித்தம் ஒரு திருப்பம்தான்யா இந்த அரசியல்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. எலக்‌ஷன் நேரத்துல நித்தம் ஒரு தத்துவமா?

ADVERTISEMENT

நீருமாய்யா.. 2026 தேர்தல் கூட்டணிகள்தான்யா கடந்த 40 வருஷத்துல இப்படி பாடாய் படுத்துது.. யாரு எந்த கூட்டணியில இருப்பாங்க?ன்னு எதுவும் சொல்ல முடியாத நிலைமைதான்..

நீர் எந்த கட்சியை இப்ப சொல்ல வருகிறீராம்?

ADVERTISEMENT

ராமதாஸ் பாமகதான்.. எந்தப் பக்கம் ராமதாஸ் போகப் போறாருன்னு தொண்டர்கள் ரொம்பவே தவிச்சுகிட்டு இருக்காங்க..

பாஜகவைப் பொறுத்தவரைக்கும் அப்பா- மகன் பாமக ரெண்டுமே கூட்டணியில இருக்கனும்னு ஆசைப்பட்டது.. பாமக ஓட்டுகள் சிந்தாம சிதறாம கூட்டணிக்கு வந்துடனும்னு கணக்குப் போட்டது..

ADVERTISEMENT

அதிமுகவும் ராமதாஸ் தரப்புல பேசிகிட்டு இருந்தது.. அப்ப, அன்புமணி திடீர்னு இபிஎஸ்ஸை சந்திச்சு அதிமுக- பாஜக கூட்டணியில சேர்ந்துட்டாரு.. அதோட, இபிஎஸ்கிட்ட அன்புமணி விதிச்ச முக்கியமான நிபந்தனையே ”ராமதாஸை கூட்டணியில சேர்க்கவே கூடாது”ன்னுதான்.. இதை நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம்..

”ராமதாஸும் இதே கூட்டணியில இருந்தா நாங்க கேட்கிற தொகுதிகளைத்தான் அவரும் கேட்பாரு.. நாங்க அறிவிக்கிற வேட்பாளர்களை அவங்க ஏத்துக்கவும் மாட்டாங்க.. எங்க தொண்டர்களும் அவங்களுக்கு வேலை செய்யமாட்டாங்க.. ரொம்ப குழப்பமாகிடும்.. அதனால ராமதாஸை கூட்டணியில சேர்க்க வேண்டாம்”னு பிராக்டிக்கலான விஷயங்களை அன்புமணி சொல்லி இருந்ததை நாம பதிவு செஞ்சிருந்தோம்..

அதனால ராமதாஸுக்கு ரெண்டு ஆப்ஷன்தான் இருந்துச்சு.. ஒன்னு திமுக கூட்டணி.. இன்னொன்னு தவெக கூட்டணி..

அந்த சூழல்ல ராமதாஸ் கிட்ட ஜெகத்ரட்சகன் மூலமா திமுகவும் பேச்சுவார்த்தை நடத்துச்சு.. இருந்தாலும், “காங்கிரஸ் முடிவு என்னன்னு தெரிஞ்சுகிட்டு சொல்றோம்”னு திமுக தலைமை சொல்லி இருந்தது.. பாமகவை கூட்டணியில சேர்த்துகிட்டா திருமா என்ன முடிவு எடுப்பாருன்னும் ஒரு கேள்வி திமுக தலைமைகிட்ட இருந்துச்சு..

இப்ப, பெங்களூருவுக்கு ட்ரீட்மெண்ட் போய்ட்டு திரும்பி வந்த விசிக திருமா, ”பாமக- பாஜக இருக்கிற கூட்டணியில இருக்கவே மாட்டோம்”னு திட்டவட்டமாக சொல்லிட்டாரு..

இதனால, ராமதாஸை தேர்தல்ல தனித்து நிற்க சொல்லிகிட்டு இருக்கு திமுக..

இதுக்கு இடையில ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, விஜய் தரப்பை தொடர்பு கொண்டு பேசியிருக்காங்க.. அவங்களும், ”காங்கிரஸ் முடிவு தெரியட்டும்னு வெயிட் பண்ணுங்க”ன்னு சொல்லி இருக்காங்க..

இதை பத்தி தவெக தரப்புல பேசுனப்ப, “வடமாவட்டத்துல பாமகவோட இளைஞர்கள் ஓட்டு கணிசமா எங்ககிட்டு வந்துருச்சுன்னு நம்புறோம்.. அப்படி இருக்கும் போது ராமதாஸை கூட்டணியில சேர்க்கனுமான்னு ஒரு கேள்வி இயல்பாவே எங்களுக்கு வரும் இல்லையா?” என பிடிகொடுக்காமலேயே பேசுகின்றனர்.

இதனால திமுக சொல்ற மாதிரி ராமதாஸ் பாமக ‘தனித்து’ போட்டியிடுமா? அல்லது வெயிட் பண்ணியாவது விஜய் கூட கூட்டணி வைச்சுக்குமா?ன்னு தைலாபுரம் தொண்டர்கள் தவிச்சுகிட்டு இருக்காங்க என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share