வைஃபை ஆன் செய்ததும், ”பனியும் வெயிலும் செய்த கலவை”யா இருக்கே கிளைமேட் என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ‘மோதலும் கூடலுமா’? திமுக- காங்கிரஸ் விவகாரமா?
ஆமாய்யா.. திமுகவோட காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும் நடக்கிற ‘சம்பவங்கள்’ ரொம்பவே கொதிப்பாத்தான் இருக்கு..
அறிவாலயத்துல பேச்சுவார்த்தை நடத்திட்டுப் போன கிரிஷ் சோடங்கர் ராகுலை சந்தித்து பேசுனாரு.. அதை பத்தி நாம சொல்லி இருந்தோம்.. இல்லையா?
அதுக்கு பிறகு கேசி வேணுகோபாலும் கிரிஷ் சோடங்கரும் நேத்து தமிழக காங்கிரஸ் சிட்டிங் எம்.பி, எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பேசினாங்க..

அப்ப, “திமுக 25 சீட் தர்றேன்னு சொல்லி இருக்கு.. இதை ஏத்துக்கிறதா? இல்லையா? அடுத்து நாம என்ன முடிவு எடுக்கலாம்?னு ராகுல்ஜி உங்க கிட்ட கேட்க சொன்னாரு”ன்னு ரெண்டு பேரும் சொல்லி இருக்காங்க..
மெஜாரிட்டியான காங்கிரஸ் சிட்டிங் எம்.பி, எம்.எல்.ஏக்கள் சொன்னதை அப்படியே சொல்றேன்யா..”திமுக 25 சீட் கொடுக்கிறதா சொல்லி இருக்குன்னா நாம பேசிப் பார்க்கலாமே.. இன்னும் அதிக சீட் கூட கேட்டு வாங்கலாமே.. பேச்சுவார்த்தைக்கு போறதுல்ல என்ன ஆகப் போகது?”ன்னு கேட்டிருக்காங்க..
அதுக்கு அப்புறமா, “ ஒருவேளை நாம திமுக கூட்டணியை விட்டு விலகனும் முடிவு எடுத்திருந்தா அதை எல்லாம் 6 மாசத்துக்கு முன்னாடியே செஞ்சுருக்கனுமே.. எலக்ஷனுக்கு இன்னும் 50 நாள்கூட இல்லையே… இப்ப திடீர்னு திமுக கூட்டணியை விட்டு விலகுறோம்னா என்ன காரணத்தை மக்கள்கிட்ட நாம சொல்லப் போறோம்? திமுக சீட்டை குறைச்சு கொடுத்துருச்சு.. போன டைம் கொடுத்த சீட்டையே இந்த டைம் கொடுத்துருச்சுன்னு நம்பர்ஸை பத்தி சொல்றதா?”ன்னு கேட்டிருக்காங்க..
அதே மாதிரி, “விஜய்க்கு ஆதரவு இருக்குதுன்னு நீங்கதான் சொல்றீங்க.. அதுக்கு ஏதாவது நம்பர்ஸ் இருக்கா? அப்படி எல்லாம் எதுவுமே இல்லையே..
இங்க கிரவுண்ட்ல நிக்கிறது நாங்கதான்.. எங்களுக்கு எல்லாம் அப்படி ஒன்னும் விஜய்க்கு பெருசா ஆதரவு இருக்கிற மாதிரி தெரியலையே.. விஜய்யோட ரசிகர்கள், தவெக தொண்டர்கள்தான் ஆதரவாக இருக்காங்களே தவிர பொதுமக்கள் அப்படி ஒன்னும் விஜய்க்கு ஆதரவா இல்லையே? கிரவுண்ட்ல நிலவரம் இப்படித்தான் இருக்குது.. அப்படிங்கும் போது விஜய்யை நம்பி நாம எப்படி போறது?”ன்னும் சொல்லி இருக்காங்க..
அடுத்ததா, “நாம பாஜகவை வீழ்த்தனும்னு சொல்றோம்.. அதுக்கு திமுக கூட்டணிதானே சரியா இருக்கும்.. நாம கூட்டணியை விட்டு வெளியேறுனா அதிமுக மூலமா தமிழ்நாட்டுக்குள்ள பாஜக வந்துருச்சுன்னு வையுங்க.. அதுக்கு பிறகு இங்க நம்மால எதுவுமே செய்யவே முடியாமலே போயிடுமே.. காலத்துக்கும் பாஜகவை உள்ளே கொண்டு வந்ததே காங்கிரஸ்தானு பழியை சுமக்கனுமே”ன்னும் ஆணித்தரமா சொன்னாங்களாம்..
அதோட, “நீங்க சர்வே ரிப்போர்ட்டுல 165 சீட் விஜய்கூட சேர்ந்தா கிடைக்கும்னு சொல்றீங்க.. அந்த சர்வே ரிப்போர்ட்டை விஜய்கிட்ட இருக்கும் ஆதவ் அர்ஜூனாதான் எடுத்தது.. அதுதான் மாணிக்கம் தாகூர் மூலமா ஹை கமாண்டுக்கு வந்துருக்கு..
சர்வே எடுக்கிறவங்க அவங்களுக்கு சாதகமாகத்தானே ரிப்போர்ட் கொடுப்பாங்க.. 165 சீட் எப்படி கிடைக்கும்னு சொல்றாங்கன்னு தெரியலை..
ஏன்னா இங்கே மக்கள்கிட்ட விஜய்க்கு ஆதரவா பெரிய எழுச்சி எல்லாம் எதுவுமே இல்லையே.. ஆளும் திமுகவுக்கு எதிராக மக்கள் இங்க புரட்சி எதுவும் செய்யலையே.. போராட்டங்களும் நடக்கலையே.. அப்புறம் எப்படிங்க 165 சீட் வரும்னு அவங்க சொல்றாங்கன்னு நீங்களும் நம்புறீங்க? அவங்க போலியா ஒரு நம்பர்ஸை சொல்லி நம்மளை கூட்டணிக்குள்ள கொண்டு வர டிரை பண்றாங்க.. அதை நாம அக்செப்ட் பண்ணனுமா?
புதுச்சேரி, கேரளாவுல விஜய் பிரசாரம் செய்ய வருவாருன்னு சொல்றீங்க.. இங்க அவரு முதல்ல வீட்டை விட்டே வெளியெ வரமாட்டேங்கிறாரு.. பிரசாரம்னு மாசத்துக்கு ஒருநாள் ஏதாவது ஒரு ஊருக்கு போய் 20, 25 நிமிசம் பேசிட்டு வந்துடுறாரு.. அவரு கேரளாவுக்கும் புதுச்சேரிக்கும் வந்து நமக்கு ஆதரவா பிரசாரம் செய்வாருன்னு எப்படித்தான் நம்புறீங்களோ?”ன்னு கொட்டித் தீர்த்துட்டாங்களாம்..
அதே நேரத்துல, “எங்க ஒப்பீனியன் இதுதான்.. இங்க கிரவுண்ட் ரியாலிட்டியும் இதுதான்.. அதுக்கு மேல ராகுல்ஜி என்ன முடிவு எடுக்கிறாரு எடுக்கட்டும்.. ஏத்துக்கிறோம்”னு விரக்தியா சொல்லியிருக்காங்க..
இப்படி ஒப்பீனியனை எல்லாம் கேட்டுட்டு இதுக்கு அப்புறமா, ஒரே நேரத்துல காங்கிரஸ் ரெண்டு சம்பவங்களை செஞ்சுருக்கு.. ஒன்னு, சிஎம் ஸ்டாலினுக்கு பர்த் டே விஸ் பண்ணின ராகுல், வழக்கமாக சொல்ற ‘My brother’ அப்படிங்கிறதை கட் செஞ்சிருந்தாரு..
ஸ்டாலினும் அதே பாணியில நன்றி தெரிவிச்சாரு.. ‘My brother’ மிஸ்ஸிங் மேட்டரு பத்தி செம்ம டிபேட் ஓடுதுன்னும் பதிவு செஞ்சிருந்தோம்..
இன்னொரு விஷயம், ராகுல் ட்வீட் போட்ட அதே டைம்ல ANI நியூஸ் ஏஜென்சிக்கு கிரிஷ் சோடங்கர் கொடுத்த பேட்டி.. சின்ன பேட்டிதான்.. ஆனால் விவகாரம் எல்லாம் வில்லங்கம்தான்..
கிரிஷ் சோடங்கர் அந்த பேட்டியில,”திமுக 25 சீட் கொடுக்றேன் சொல்லுச்சு.. நாங்கதான் முடியாதுன்னு சொல்லிட்டோம்; எங்க எம்.எல்.ஏ.க்களை வெச்சே நாங்க சொந்த பலத்துல, ராஜ்யசபாவுக்கு எம்.பி.யை அனுப்பிடுவோம்; திமுகவுக்கு கடந்த காலத்துல நிறைய செஞ்சுட்டோம்.. அதனால திமுக இப்ப எங்களுக்கு திருப்பி செய்யனும்; விஜய் கட்சிக்கு இளைஞர்கள் ஆதரவு இருக்கு.. எங்களை விஜய் கட்சி அங்கீகரிக்குது”ன்னு சொல்லி இருந்தார்..
காங்கிரஸ் எம்பி-எம்எல்ஏக்கள்கிட்ட ஒப்பீனியன் கேட்டது, ராகுல் ட்வீட் போட்டது, சோடங்கர் பேட்டி கொடுத்ததுன்னு எல்லா விஷயமும் சிஎம் ஸ்டாலினுக்கு அப்டேட் செஞ்சிருக்காங்க..

ஓ.. ஸ்டாலின் ரியாக்ஷன் என்னவாம்?
காங்கிரஸ் கட்சியோட இந்த லேட்டஸ் மூவ்கள் எல்லாமே திமுகவை ரொம்பவே கொந்தளிக்க வெச்சிருச்சு.. ஆனாலும் திமுகவுல யாரும் பகிரங்கமாக விமர்சிக்காம கொதிச்சுகிட்டு இருக்காங்க..
ஏன்னா, காங்கிரஸ் மேலிடத்தைப் பொறுத்தவரைக்கும் திமுக ஓபனா நம்மை விமர்சிக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கிறதாம்.. அதை வெச்சி குழப்பத்தை அதிகமாக்கிடலாம்னு சிலர் கால்குலேஷன் போடுறாங்களாம்.. அதனால திமுக சைடுல இருந்து யாரும் பகிரங்கமா ராகுலையோ கிரிஷ் சோடங்கரையோ விமர்சிக்கலையாம்..
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலர்கிட்ட பேசுனப்ப, “காங்கிரஸோட இந்தப் போக்கு சிஎம்மை ரொம்பவே கோபப்பட வைச்சிருக்கு.. கிரிஷ் சோடங்கர் கொடுத்திருக்கிற பேட்டியில, திமுகவுக்கு நாங்க அன்னைக்கு செஞ்சோம்.. இன்னைக்கு திருப்பி தரனும்னு சொல்லி இருக்காரு.. ”இந்த வார்த்தை எல்லாம் ஸ்டாலினுக்கு கோபத்தை அதிகமாக்கிடுச்சு..
ஏன்னா, “காங்கிரஸ் நமக்கு அப்படி என்ன செஞ்சுட்டாங்க.. அன்னைக்கு 2ஜி கேஸை வெச்சு நம்மை எப்படி படுத்தி எடுத்தாங்க.. தயாளு அம்மாளை விசாரிச்சு கைது செய்ய போறோம்னு சொன்னாங்க.. கனிமொழி, ஆ.ராசாவை ஜெயில்ல போட்டாங்க.
அன்னைக்கு சோனியாவை தலைவர் கலைஞர் நேரில போய் பார்த்து பேசினாரு.. அப்ப கூட, “கனிமொழி மேல எந்த பிரச்சனையும் இல்லை.. அவங்களுக்கு சிக்கல் வராது”ன்னு உறுதி கொடுத்தாங்க.. ஆனா அதையும் மீறி இதே ராகுல் காந்தி பேச்சை கேட்டுதானே கனிமொழியையும் ஜெயில்ல போட்டாங்க.. இதைத் தவிர வேற என்ன நமக்கு காங்கிரஸ் செஞ்சிடுச்சாம்?
2006 எலக்ஷன்ல நாம 96 சீட் ஜெயிச்சோம்.. பெரும்பான்மைக்கு 118 தேவைப்பட்டுச்சு.. பாமக, லெப்ட் பார்ட்டீஸ் (18+6+9) 33 இடத்துல ஜெயிச்சிருந்தாங்க.. காங்கிரஸ் 34-ல் ஜெயிச்சது.. டாக்டர் ராமதாஸ், திமுக ஆட்சிக்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு தரும்னு சொன்னாரு.. இடதுசாரிகளும் அப்படி சொன்னாங்க.. அதனால காங்கிரஸ் தயவே தேவையே இல்லாமதான் தலைவர் கலைஞர் ஆட்சியை நடத்துனாரு.. இவங்கதான் திமுக ஆட்சியே எங்களால நடந்துச்சுன்னு சும்மா சொல்லிகிட்டு இருக்காங்க..”ன்னும் ஸ்டாலின் ரொம்பவே கோபமா பேசினார்” என்றனர்.
அதோட, அறிவாலயப் பேச்சுவார்த்தையில “மார்ச் 2-ந் தேதி நாங்க வர்றோம்.. பேசுறோம்”னு சொல்லி இருந்து காங்கிரஸ் டீம்.. ஆனா இன்னைக்கு அறிவாலயத்துக்கு காங்கிரஸ் டீம் போகலை.. திமுகவும் ‘வந்து பேசுங்க’ன்னும் கூப்பிடலை..
திமுகவைப் பொறுத்தவரைக்கும் ‘அவங்களா வந்தா பேசுவோம்’னு முடிவுல இருக்கிறதாம்..
இதுல இன்னொரு விஷயத்தையும் அறிவாலயம் லீடர்ஸ் சொல்றாங்க.. அதாவது, “காங்கிரஸ் கட்சி ராஜ்யசபா சீட்டே கேட்கலைங்க.. அவங்க அசெம்பிளி சீட்ஸ்தான் பேசுனாங்க.. நாங்கதான் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கிறோம்னு சொன்னோம்.. ராஜ்யசபா எலக்ஷன் நாமினேஷன் தாக்கல் மார்ச் 5-ந் தேதி முடியுது.. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு” என்கின்றனர்..
லேட்டஸ்ட்டா வந்த தகவல் என்னான்னா, காங்கிரஸ் டீம் நாளைக்கு சென்னைக்கு வருதாம்.. அறிவாலயத்துல நாளைக்கு பேசுன பிறகுதான், அதகளமா? அதிரி புதிரியா? புயல் கரையை கடந்துச்சான்னு தெரியும்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
