ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் பதில்.. காங்கிரஸ் முடிவு.. விஜய் மூவ்… ராமதாஸ், பிரேமலதா நிலை.. ஓபிஎஸ்க்காக போராடும் தினகரன்

Published On:

| By Mathi

Digital Thinnai Jan30

வைஃபை ஆன் செய்ததும், ”நேற்றைப் போல இன்று இல்லையே” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. தேர்தல் களம் தவிக்குதா? தகிக்குதா?

ADVERTISEMENT

”எல்லாம் கலந்து செய்த கலவையப்பா..” திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுல தேக்கம் ஏற்பட்டிருந்துச்சு.. அப்ப சிஎம் ஸ்டாலின் அட்வைஸ்படி டெல்லிக்கு போய் ராகுல் காந்தியை சந்திச்சு பேசி நிலைமையை சுமூகமாக்கியிருக்கும் கனிமொழி, தூத்துக்குடியில் இன்னைக்கு பிரஸ்மீட்டுல பேசுறப்ப, ”திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பிருக்கு”ன்னு சொல்லி இருக்காங்க பார்த்தீரா?

ADVERTISEMENT

ஆமாய்யா.. ’புது கட்சிகள்’ யாராம்? டீட்டெய்லா சொல்லுமய்யா..

சொல்றேன்.. திமுககிட்ட டாக்டர் ராமதாஸ் தரப்பு பேசிகிட்டு இருந்தாங்க இல்லையா? ஆனா…இப்ப, ‘கூட்டணிக்குள்ள வேண்டாம்’னு திமுக தரப்புல சொல்லிவிட்டுட்டாங்களாம்.

ADVERTISEMENT

ஏன் என்னாச்சாம்?

பதறாதீரு.. திமுகவோட இந்த முடிவை பத்தி நாம அறிவாலய தரப்புல் கேட்டப்ப, “ராமதாஸை கூட்டணிக்குள்ள கொண்டு வரலாம்னுதான் சிஎம் நினைச்சாரு.. ஆனா விசிக தலைவர் திருமா, பாமக உள்ளே வந்தா விசிக கூட்டணியிலேயே இருக்காதுங்கிறதுதான் எங்க நிலைப்பாடுன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்காரு .. அதனால விசிகவை சங்கடப்படுத்த வேண்டாம்.. விசிக நம்ம கூடவே இருக்கனும்னு சிஎம் முடிவு செஞ்சுட்டாரு.. இதனால ”பாமகவை கூட்டணிக்குள்ள வேண்டாம்.. தனிச்சு போட்டியிடுங்க.. உங்க செலவுகளை நாங்க பார்த்துக்கிறோம்” னு சொல்லி அனுப்பிட்டாரு..” என்கின்றனர்.

அப்ப விஜய் கூட டாக்டர் ராமதாஸ் கை கோர்ப்பாரோ?

டாக்டர் ராமதாஸ் கிட்ட இருந்தது ரெண்டு ஆப்ஷன்ஸ்தான்.. ஒன்னு திமுக.. இன்னொன்னு தவெக.. திமுக கதவை மூடி மாற்று யோசனை சொல்லிடுச்சு.. விஜய் தரப்புகிட்ட ஏற்கனவே ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பேசுன்னாங்க.. இங்கேயும் ராமதாஸுக்கு நெகட்டிவ் பதில்தான் கிடைச்சிருக்காம்..

என்ன நடந்துச்சுன்னு தவெக சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, ”டாக்டர் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி எங்ககிட்ட பேசுனாங்கதான்.. ஆனா பாமகவுக்கு 25 சீட் கேட்கிறாங்க..

பாமகவோட பெல்ட்னாலே அது வடமாவட்டம்தான்.. அவங்க கேட்குற 25 சீட்டுல பெரும்பகுதி வடமாவட்டமாகத்தான் இருக்கும்..

இதைபத்தி சீரியசா ஒரு டிஸ்கஷனை தளபதி நடத்தியிருந்தாரு.. அதுல பேசும் போது, “நமக்கு செல்வாக்கு அதிகமான பகுதி வடமாவட்டங்கள்.. அதுல பாமகவுக்கே அதிகமாக சீட்டுகளை கொடுக்கனும்னா எப்படி சரியா வரும்? பாமக உள்ளே வர்றப்ப இன்னொரு ஃபேக்டரையும் நாம கவனிக்கனும்.. அதே வடமாவட்ட தலித் வோட்ஸ் நமக்கு கணிசமா இருக்கு.. பாமகவை உள்ளே கொண்டு வந்தா தலித் வோட்டர்ஸ் எப்படி மாம்பழ சின்னத்துக்கு ஓட்டு கேட்பாங்க? வோட்ஸ் போடுவாங்க? அதனால பாமக நமக்கு சரிப்பட்டு வராது”ன்னு சொல்லிட்டாரு..” என்கின்றனர்.

ஓஹோ.. திமுகவும் இல்லை.. தவெகவும் இல்லையா? சரி இன்னொரு டாக்டர் இருக்கிறாரே?

ஆமாய்யா.. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் பாஜக- ஆர்.எஸ்.எஸ்.-க்கு தீவிர ஆதரவா இருந்தாரு.. அப்புறமா விஜய் பக்கம் சாஞ்சாரு.. இப்ப ரெண்டு பக்கமுமா இருக்காரு..

இருந்தாலும் பாஜக கூட்டணியில யாரும் கண்டுக்காததால போன சனிக்கிழமை செங்கோட்டையனை சந்திச்சு தவெக கூட்டணிக்கு போறதை பத்தி டாக்டர் கிருஷ்ணசாமி டிஸ்கஷன் செஞ்சிருக்காரு..

ஓஹோ.. செங்ஸ் என்ன சொன்னாராம்?

டாக்டர் கிருஷ்ணசாமி பேசுனதைப்பத்தி செங்ஸ்-க்கு நெருக்கமான சர்க்கிளில் பேசிப் பார்த்தோம்.. ”அண்ணனை டாக்டர் சந்திச்சு ரொம்ப நேரம் பேசுனாரு.. தவெக கூட்டணியில டாக்டர் 10 சீட் எதிர்பார்க்கிறாரு.. அதோட நிக்கலை சார்.. 6 தனித் தொகுதி, 4 பொதுத் தொகுதின்னு தொகுதி பட்டியலோடவே டாக்டர் வந்துட்டாரு.. அண்ணனும் ‘விஜய்கிட்ட பேசிட்டு சொல்றேன்’ன்னு அனுப்பி வெச்சார்” என்கின்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் விசாரிச்சப்ப, “போன சனிக்கிழமை செங்கோட்டையன் சாரை டாக்டர் சந்திச்சு பேசுனாரு.. இந்த சனிக்கிழமையே வந்துருச்சு சார்.. இன்னும் ஒரு பதிலும் வரலையே” என ஆதங்கப்படுகின்றனர்.

premalatha started her campaign for tn assembly

அப்ப, திமுக கூட்டணிக்குள்ள வரப்போறது தேமுதிகவா? அதைத்தான் கனிமொழி சூசகமா சொல்றாங்களா?

கனிமொழி பொதுவாக சொல்லியிருக்கலாம்.. தேமுதிகவோட ரொம்ப காலமா அமைச்சர் எ.வ.வேலுதான் பேச்சுவார்த்தை நடத்திகிட்டே இருக்காரு..

தேமுதிக, அங்கிட்டு அதிமுக- பாஜக கூட்டணியிலயும் பேசுனது.. இங்கிட்டு திமுக பக்கமும் பேசுனது..

தேமுதிகவோட நிலைமை இப்ப என்னான்னு விஜயகாந்த் குடும்பத்துல இருக்கிறவங்ககிட்ட பேசுனப்ப, “விஜய் வருவாருன்னு எங்களை பாஜக சைடுல வெயிட் பண்ண சொன்னாங்க.. விஜய் வரலைன்னு உறுதியானதால அமித்ஷாஜியே சுதிஷ் அண்ணன்கிட்ட 2 முறை லைனில் வந்து பேசுனாரு.. இன்னைக்கு கூட பியூஷ் கோயல் சென்னைக்கு வந்து எங்களை சந்திச்சு பேசுறதா சொன்னாங்க.. என்னமோ தெரியலை திடீர்னு பியூஷ் கோயல் புரோகிராமே கேன்சலாகிடுச்சு..” என்கின்றனர்.

தேமுதிககிட்ட பேச்சுவார்த்தை நடத்துனதைப் பத்தி திமுக தரப்புல விசாரிச்சப்ப, “சார்.. அவங்களுக்கு (தேமுதிக) முதல்ல எங்க கூட்டணியில காங்கிரஸ் இல்லாம போச்சுன்னா என்ன செய்யுறது?ன்னு ஒரு குழப்பம் இருந்துச்சு..

இப்பதான் , ஆட்சியில பங்கு இல்லைன்னு சிஎம் தெளிவா கனிமொழி மேடம் மூலமும் சொல்லிவிட்டாச்சு.. அதை ராகுல் காந்தியும் ஏத்துகிட்டாரு.. எங்க கூட காங்கிரஸ் கூட்டணி கன்பார்ம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சுகிட்டு மறுபடியும் தேமுதிக இன்வால்மெண்ட்டா பேசுறாங்க..

தேமுதிககிட்ட ஒரு சில விஷயங்களை பத்தி நம்ம சைடுல பேசியிருக்காங்க.. இருந்தாலும் இன்னும் பைனல் ஆகலைங்க சார்” என்கின்றனர்.

ஆக இப்போதைக்கு திமுக கூட்டணிக்கு போக சான்ஸ் இருக்கிறது தேமுதிகதானா? சரிய்யா.. ஓபிஎஸ் விவகாரத்தை சொல்லுமய்யா..

ஓபிஎஸ்தானே.. திடீர்னு, “அதிமுகவுல சேர நான் ரெடி.. டிடிவி தினகரனும் அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் முடிவெடுக்கனும்”னு சொன்னாரு.. எடப்பாடியோ ஒரே போடா, “அதெல்லாம் இல்லை”ன்னு கண்ட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாரு.. இதைத்தான் நீர் சொல்றீரு..

ஆனா அதிமுகவோட சீனியர் தலைவர்கள்கிட்ட நாம பேசுனப்ப, “ஓபிஎஸ்ஸை கூட்டணியில சேர்த்துக்கலாம்னு டிடிவி தினகரன் ரொம்பவே அழுத்தம் கொடுக்கிறாரு.. கட்சியில சேர்க்கிறதை பத்தியே பேச வேண்டாம்.. கூட்டணியில சேர்ப்போம்ன்னு பொதுச்செயலாளர்கிட்ட (இபிஎஸ்) டிடிவி சொல்லிகிட்டு இருக்காரு..

அதோட, பொதுச்செயலாளரோட சில அட்வைசர்ஸும் கூட, “ஓபிஎஸ்ஸை கட்சியில நாம சேர்க்க வேண்டாம்.. ஆனா, அவரை கூட்டணியில சேர்த்துகிட்டா தொந்தரவு இருக்காது.. குக்கரிலோ தாமரையிலோ ஏதோ ஒரு சின்னத்துல அவரு நின்னுகிட்டு போறாரு.. அவருக்கு பிஜேபி சீட் கொடுக்கப் போகுது.. நாம ஏன் முட்டுக் கட்டையா இருக்கனும்?”னு சொல்லியிருக்காங்க.. பொதுச்செயலாளரை ஒவ்வொரு தரப்பும் கன்வீன்ஸ் பண்றதுல சீரியஸா இருக்காங்க” என்கின்றனர்.

இதுக்கு நடுவே, திமுக ஆட்சிக்கு மீண்டும் வந்துடக் கூடாதுன்னு கங்கணம் கட்டிகிட்டு அதிமுக- பாஜக கூட்டணிக்காக ‘தீயா’வேலை செய்யுற ஜேர்னலிஸ்ட் ஒருத்தர் சீமானை சந்திச்சு ரொம்ப நேரம் பேசியிருக்காருய்யா..

High Court orders to register case against Seeman

ஓஹோ.. சீமான்கிட்ட என்ன பேசுனாராம்?

சீமான் தரப்புல விசாரிச்சப்ப, “அந்த பத்திரிகையாளர் மேல எப்பவுமே அண்ணன் (சீமான்) வாஞ்சையாதான் இருப்பாரு.. அவரும் ‘எங்க அண்ணன்’ ‘எங்க அண்ணன்’னு பாசமாதான் இருப்பாரு.. இப்ப அண்ணனை பார்த்து, “அண்ணே.. உங்களுக்கு 5 சதவீதத்துல இருந்து 8 சதவீதம் ஓட்டு உறுதியா இருக்கு.. நீங்க மட்டும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வந்துடுங்க.. நிச்சயமா திமுகவை ‘முடிச்சுடலாம்’னு சீரியசா பேசுனாரு..

அண்ணன் எல்லாத்தையும் பொறுமையாக கேட்டுகிட்டு.. ”தம்பி.. நீங்க சொல்ற வியூகம், கணக்கு, புள்ளி விவரங்கள் எல்லாம் சரி… ஆனா அண்ணன் எப்படிப்பா உங்க ஆளுக கூட கூட்டணிக்கு வந்துடுவேன்னு நினைக்கிற? அதெல்லாம் நமக்கு சரிப்படாதுங்க தம்பி.. உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்னு மட்டும்தான் அண்ணனால சொல்ல முடியும்பா” என்றபடி வழியனுப்பி வைத்தார் என்கின்றனர்..

சரிய்யா.. காங்கிரஸ்- திமுக கூட்டணி கன்பார்ம் ஆகிடுச்சே.. விஜய் என்ன செய்ய போறாராம்?

விஜய்யை பொறுத்தவரைக்கும் “ராகுல் பேசிகிட்டுதான் இருக்காரு.. எப்படியும் காங்கிரஸ் நம்ம கூட வந்துரும்”னு நம்பியே எல்லா கணக்கையும் போட்டிருந்தாரு.. இப்ப தவெக ‘தலைகள்’கிட்ட பேசுன விஜய், “காங்கிரஸ் நம்ம கையை விட்டு போகுது.. நமக்கும் கூட்டணி எல்லாம் செட் ஆகலை.. நாம ஒரு கணக்கு போட்டா இன்னொரு கணக்கு இடிக்குது.. அதுக்கு பேசாம நாம தனிச்சே தேர்தலை சந்திச்சுடுவோம்.. நம்பிக்கையோட களத்துல இறங்குவோம்”னு சொல்லியிருப்பதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share