வைஃபை ஆன் செய்ததும், “நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள்” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. வேட்பாளர் பட்டியல் எல்லாம் ஜெகஜோதியா வந்துருச்சு போல..
ஆமாய்யா.. திமுக வேட்பாளர்கள் எல்லாரும் சென்னையில முதல்வர் ஸ்டாலினை சந்திச்சு வாழ்த்து பெற்றாங்க..அதுக்கு அப்புறமா உதயநிதி ஸ்டாலின், சபரீசனையும் சந்திச்சுட்டு தொகுதிகளுக்கு கிளம்பிகிட்டு இருக்காங்க..
அதிமுக 150 வேட்பாளர்களை அறிவிச்சதால திமுக வேட்பாளர்கள் யாருன்னு ரொம்பவே எதிர்பார்ப்போட எல்லா கட்சிக்காரங்களும் இருந்தாங்க..
அதுவும் ”மா.செ.க்கள் ரிப்போர்ட்டை கன்சிடர் பண்ணாதீங்க.. நாளைக்கு ஜெயிக்காம போனா எங்களைத்தான் கேட்பீங்க”ன்னு மண்டல பொறுப்பாளர்கள், ஸ்டாலின்கிட்ட கறாரா சொல்லி இருந்ததையும் நாம வெளியிட்டிருந்தோம்..
ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் மண்டல பொறுப்பாளர்கள், மா.செ.க்கள், PEN டீம், உளவுத்துறைன்னு 4 சோர்ஸ் ரிப்போர்ட்டை வெச்சுதான் வேட்பாளரை ரெடி செய்யுறாருன்னு நாம ஏற்கனவே சொல்லி இருந்தோம்..
கடைசி சில மணிநேரங்கள் வரைக்கும் சின்ன சின்னதா மாறுதல்களோட 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேத்து ஸ்டாலின் அறிவிச்சுட்டாரு.. நாம முன்னாடியே சொன்ன மாதிரி 60க்கும் மேல புதுமுகங்களுக்கு சான்ஸ் கிடைச்சுருக்கு..சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலரோட பேரும் லிஸ்ட்ல இல்லை..
ஒரு பக்கம் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்னா இன்னொரு பக்கம் ஏமாற்றம், விரக்தி, புலம்பல்..
சரிய்யா.. ஸ்டாலின் அறிவிச்ச வேட்பாளர்களில்ல யாருடைய செல்வாக்கு அதிகமாம்?
உம்ம கேள்விக்கு ஒரே வரியில பதில் சொல்லனும்னா மண்டல பொறுப்பாளர்கள்தான்..
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் மண்டல பொறுப்பாளர்கள்.. இவங்க லிஸ்ட்ல இருந்தவங்கதான் அதிகமான பேரு வேட்பாளர்கள் ஆகியிருக்காங்க..
சென்னையை பொறுத்தவரைக்கும் மண்டல பொறுப்பாளர் ஆ.ராசா யாருக்கும் சிபாரிசு எல்லாம் செய்யலையாம்.. ஏன்னா சென்னைங்கிறதால ’தலைவர் ஸ்டாலின்’ பார்த்துக்குவாருன்னு சொல்லிட்டாராம்..
சென்னையில சிட்டிங் எம்,எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கிடைக்கலை. இதை பத்தி விசாரிச்சப்ப, “சென்னை, காஞ்சியில மா.செ.க்கள் சிபாரிசுதான் ஒர்க் அவுட் ஆகியிருக்கு.. எழும்பூர்ல பரந்தாமனுக்கும் காஞ்சியில சிவிஎம்பி எழிலரசனுக்கும் சீட் கொடுக்காததுக்கும் மா.செ.க்கள்தான் காரணமாம்.. பரந்தாமனுக்கு உதயநிதி ரொம்பவே பரிந்துரை செஞ்சாரு.. ஆனால் ஒர்க் அவுட் ஆகலை.. மா.செ. சேகர்பாபு பரிந்துரைச்ச தமிழன் பிரசன்னாவுக்கு சீட் கிடைச்சிடுச்சு..
சிவிஎம்பி எழிலரசனைப் பொறுத்தவரைக்கும் ஆக்டிவ்வா செயல்படுகிறவர்.. சட்டசபையில எழிலரசனைப் பேச்சை சிஎம் ஸ்டாலின் ரொம்பவே ரசிச்சு கேட்பாரு.. பாராட்டுவாரு.. ஆனா மா.செ. தாமோ அன்பரசன் எதிர்ப்பு தெரிவிச்சதால அவருக்கு சீட் கிடைக்கலை..
திமுகவோட பொருளாளர் டிஆர் பாலு.. அவர்தான் கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை குழு தலைவர்.. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளையே அறிவிச்சவரு.. அவர் ரெக்கமெண்ட் செஞ்ச தாம்பரம் எஸ்.ஆர். ராஜாவுக்கும் சீட் கிடைக்கலை.. அதனால எஸ்.ஆர். ராஜா ஆதரவாளர்கள் எல்லாம் கண்ணீருடன் டிஆர் பாலுவை முற்றுகையிட்டு வேட்பாளரை மாத்த சொன்னாங்க..
கோவையில மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கொடுத்த லிஸ்ட்ல இருந்தவங்களுக்குதான் சீட்.. .
திருச்சியில மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு கொடுத்த ரிப்போர்ட்டால சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கிடைக்கலை.. இதே மாதிரி எ.வ.வேலு போன்ற மண்டல பொறுப்பாளர்கள் கொடுத்த லிஸ்ட்ல இருந்தவங்களுக்குதான் சீட் கிடைச்சிருக்கு..
தெக்கே எடுத்துகிட்டா, கனிமொழி சொன்ன ஒரு சிலருக்கு சீட் கிடைக்கலை.. ஒட்டப்பிடாரத்துல கபடி வீரர் மண்ணத்தி கணேசனை நிறுத்த ரெக்கமெண்ட் செஞ்சாங்க கனிமொழி.. இவரோட பயோகிராபிக்கைதான் பைசன்னு மாரி செல்வராஜ் சினிமாவா எடுத்தாரு..
மண்ணத்தி கணேசனை வேட்பாளரா நிறுத்தினா இளைஞர்கள், கபடி வீரர்கள் ஆதரவு அதிகமா இருக்கும்னு கனிமொழி கால்குலேசன் போட்டாங்க.. மாரி செல்வராஜ் கூட உதயநிதியை சந்திச்சு இது விஷயமா பேசியிருந்தாரு.. ஆனால் பொருளாதாரத்தை கணக்குல வெச்சு மண்ணத்தி கணேசனுக்கு சீட் கிடைக்காம போச்சு..
அதைவிட கனிமொழியே தனக்கு சீட் வேணும்னும் கேட்டு பார்த்தாங்க.. அதாவது, ஸ்டாலின் கிட்ட, “அம்மாவை பார்த்துக்க சென்னையில இருக்க வேண்டியது இருக்கு.. டெல்லி பொல்யூசனும் ஒத்துக்காம அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது..”ன்னு சொல்லி அசெம்பிளி சீட் கேட்டாங்க கனிமொழி.. ஆனா கனிமொழிக்கு ஸ்டாலின் எந்த பதிலும் சொல்லலையாம்..
சிஎம் மனைவி துர்கா ஸ்டாலின் பிறந்த ஊரான திருவெண்காடு சீர்காழி தொகுதியிலதான் வருது… இங்க சிட்டிங் எம்.எல்.ஏ.வான பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க துர்கா ஸ்டாலின் பரிந்துரைச்சாங்க..ஆனா கடைசி நேரத்துல மதிமுகவுக்கு அந்த தொகுதியை கொடுக்க வேண்டியதாச்சு..
உதயநிதியும் இளைஞரணி கோட்டாவுல பலருக்கும் பரிந்துரைச்சாரு….அதுல உடுமலை ஜெயக்குமார் உள்ளிட்டவங்களுக்கு சீட் கிடைச்சிருக்கு.” என்றனர்.
பெரும்பாலுமே மண்டல பொறுப்பாளர்கள் கொடுத்த லிஸ்ட்ல இருந்தவங்கதான் வேட்பாளர்களாக களத்துல நிற்கிறாங்க.. இந்த பட்டியலை ஸ்டாலின் அறிவிச்சு முடிச்ச உடனேயே, பொதுச்செயலாளர் துரைமுருகன், ஸ்டாலினுக்கு சால்வை போட்டு, “மகிழ்ச்சி தம்பி”ன்னு நன்றி சொன்னார்… ஆனால் ஸ்டாலினோ, “நான் மகிழ்ச்சியா தரலை”ன்னு சொன்னாரு.. அதாவது துரைமுருகனுக்கு சீட் இல்லைங்கிறதுதான் ஸ்டாலின் முடிவா இருந்துச்சாம்.. ஆனா, “இவ்வளவு காலம் இருந்துட்டேன்..இது எனக்கு கடைசி தேர்தலாகவும் இருக்கலாம்..”னு சொல்லி சீட் வாங்கியிருந்தாராம்.. அதைத்தான் ஸ்டாலின் ”உங்களுக்கு மகிழ்ச்சியோடு சீட் தரலை”ன்னு சொன்னாராம்யா..என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் நுழைந்தது வாட்ஸ் ஆப்.
