வைஃபை ஆன் செய்ததும், ”களம் இப்பதான் சூடு பறக்குது”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. களம் அனல் பறக்குது?
திமுக- காங்கிரஸ் கூட்டணியிலதான்.. பிப்ரவரி 17-ந் தேதி பட்ஜெட்டை தாக்கல் செஞ்ச கையோடு பிப்ரவரி 22-ந் தேதியில் இருந்து கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தை நடத்துவோம்னு திமுக அறிவிச்சது இல்லையா?
திமுக இப்படி அறிவிச்சாலும், ஆட்சியில் பங்கு.. அதிக சீட்.. அப்படிங்கிற முழக்கத்தை காங்கிரஸுல மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து விடாம பேசுறாங்க..
அதோட நிற்காம, எங்களுக்கு மரியாதை கிடைக்கலைன்னா திருப்பி அடிப்போம்.. மகளிர் உரிமைத் தொகையால ஜெயிக்கனும்னு நினைக்கிறது எல்லாம் மூடநம்பிக்கைன்னும் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கிறாங்க..
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டத்தைக் கூட்டுன மாணிக்கம் தாகூர், ஆட்சியில பங்கு, உள்ளாட்சியில அதிக சீட்ட்ன்னு தீர்மானம் போட வைச்சாரு..
ஏற்கனவே, சிஎம் ஸ்டாலின், ‘வருத்தம் கலந்த கோபத்துல’ இருக்காருன்னு நாம சொல்லி இருந்தோம்.. அதுக்கு அப்புறமும் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் ரொம்பவே குடைச்சல் கொடுக்கிறதால சிஎம் ரொம்பவே கோபமா இருக்கிறாரு..
இப்ப மாணிக்கம் தாகூர் விவகாரமா கார்கேவை சந்திச்சு பேசப் போறேன்னு செல்வப்பெருந்தகையும் சொல்லி இருந்தாரு..
இதுவரை ’வருத்தம் கலந்த கோபத்துல இருந்த’ சிஎம் இப்ப ராகுல் காந்திக்கு நிபந்தனை விதிச்சு மெசேஜ் அனுப்பி இருக்கிறாராம்..
இதைபத்தி திமுக சீனியர்ஸ்கிட்ட நாம பேசுனப்ப, “மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து இப்படி பேசுறதால போனவாரமே ஒரு அறிக்கையை தலைமைக் கழகம் சார்பா கொடுக்கலாம்னு சிஎம் டிஸ்கஷன் செஞ்சாரு.. ஆனா மூத்த அமைச்சர்கள்தான் வேண்டாம்னு சொல்லி இருந்தாங்க..
இதுக்கு அப்புறமும் ரெண்டு பேரும் விடாம சீண்டிகிட்டே இருக்காங்க.. அதனால ”மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ரெண்டு பேரு மேலயும் நீங்க நடவடிக்கை எடுங்க.. அதுக்குப் பிறகு பேச்சுவார்த்தையை நடத்தலாம்”னு ராகுல் காந்திக்கு சிஎம் நிபந்தனை போட்டு மெசேஜ் அனுப்பி இருக்காரு.,.” என்கின்றனர்.
இன்னைக்கு டெல்லியில ராகுல் காந்தியை மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி சந்திச்சும் பேசியிருக்காங்க… கார்கேவை செல்வப்பெருந்தகையும் பெங்களூருல சந்திச்சு ஆலோசனை நடத்துறாரு.. இதனால திமுக- காங்கிரஸ் கூட்டணியில அடுத்த கட்டமா என்ன நடக்கும்? ஸ்டாலின் நிபந்தனையை ராகுல் ஏற்பாரா?ன்னு தேர்தல் களம் பரபரப்பா இருக்குதய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
