வைஃபை ஆன் செய்ததும், ” உலகாண்டவண்டா வந்து தொடுடா”ன்னு பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னப்பு.. இன்னைக்கு ‘ஜனநாயகன்’ மோடுல இருக்கிறீரு?
ஆமாய்யா.. இப்ப அதுதானே செம்ம பரபரப்பா இருக்கு.. நான் படத்தோட சீன்ஸ சொல்லலை.. பட ரிலீஸுக்கு பின்னாடி இருக்கிற பிஹைன்ட த சீன்ஸ் சொல்றேன்யா..
ரொம்பவே ‘அசால்ட்’ காட்டாம மேட்டருக்கு வாருமய்யா..
ஜனநாயகன் படத்தை ஜனவரி 9-ந் தேதி ரிலீஸ் பண்ண ஏற்பாடுகள் செஞ்சுட்டாங்க.. ஆனா சென்சார் சட்டிபிடிகேட் கிடைக்கலை.. அதுக்கு இடையில கரூர் சம்பவத்துக்காக சிபிஐ சம்மன் அனுப்பி இருக்குன்னும் தகவல்கள் வந்துருக்கு..
ஆமா. என்னதான்யா நடந்துச்சு?
ஜனநாயகன் பட வேலைகளை முடிச்சு சென்சாருக்கு போன மாசமே அனுப்பி இருந்தாங்க.. படத்தை சென்சார் போர்டு மெம்பர்ஸும் பார்த்துட்டு சில திருத்தங்கள் சொன்னாங்க. அப்பவே U/A கொடுக்கிறோம்னு சென்சார் போர்டுலயும் சொன்னாங்க.. இதையும் நம்பி திருத்தங்கள் செஞ்சு சென்சாருக்கு திருப்பியும் அனுப்புச்சு ஜனநாயகன் டீம்.. ஆனா சென்சார் சட்டிபிடிகேட்தான் வரலை.. என்னாச்சு ஏதாச்சுன்னு விசாரிச்சா சரியா பதிலும் வரலைன்னு கோர்ட்டுக்கு போயிட்டாங்க..
கோர்ட்டுல நடந்த விசாரணையில, மத உணர்வுகளை புண்படுத்துற சீன்ஸ் இருக்குன்னு சென்சார் போர்டு மெம்பரே கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டாங்க.. அதனால மறுபடியும் தணிக்கை செய்ய மும்பைக்கு அனுப்பிட்டோம்னு மத்திய அரசு தரப்புல சொல்லியிருக்கு.. இந்த கேஸுல பட ரிலீஸ்னு அறிவிச்ச ஜனவரி 9-ல்தான் தீர்ப்புன்னு ஹைகோர்ட் சொல்லியிருச்சு..
சரி அப்படி என்னதான் மத உணர்வுகளை புண்படுத்துற காட்சி இருக்குன்னு புரொடக்ஷன் சைடுல விசாரிச்சா, அரசியல் அணுகுண்டுகளையே வீசுறாங்கய்யா..
என்னய்யா திடுதிப்பென்னு அரசியல் என்ட்ரி கொடுக்கிறீரு?
ஆமாய்யா.. புரொடக்ஷன் சைடுல நம்மகிட்ட சொன்னதை சொல்றேன் கேளும்…”படத்துல “OPERATION OM” (ஆபரேஷன் ஓம்) ன்னு காட்சிகள் வெச்சிருக்கிறோம் சார்.. அது ‘இந்துக்களோட’ உணர்வுகளை புண்படுத்துதுன்னுதான் சென்சார்டு போர்டு மெம்பர் புகார் கொடுத்திருக்காங்க.
இந்த சீனையே நாங்க கட் பண்ணி தூக்கவும் ரெடியாக இருந்தாலுமே படம் ரிலீஸ் ஆகறதுக்கு அரசியல் ரீதியாக விஜய் சாருக்கு நிபந்தனை விதிக்கிறாங்க..
டெல்லியில இருந்து விஜய் சார் கிட்ட அமித்ஷா சார்பில சில பேரு பேசுறாங்க.. அவங்க சொல்றது ஒன்னே ஒன்னுதான்.. ”எலக்ஷனில தனியாகவே நில்லுங்க.. பிரசாரம் செய்யுங்க.. அதை எல்லாம் நாங்க வேணாம்னு சொல்லலை.. ஆனால் அந்த பிரசாரம் எல்லாமே திமுகவை மட்டும்தான் டார்கெட் செய்யனும்.. திமுக அரசை மட்டும்தான் அட்டாக் செய்யனும்.. பாஜகவையோ மத்திய அரசையோ அட்டாக் செய்யவே கூடாது.. இதுக்கு ஓகேன்னா சொல்லுங்க.. சென்சார் சர்ட்டிபிகேட் வந்துடும்.. ஜனவரி 9-ந் தேதி படமும் ரிலீஸாகிடும்”னு சொல்றாங்க சார்.. இந்த பேச்சுவார்த்தை நடந்துகிட்டே இருக்கிறதால என்ன ஆகுமோன்னு ஒரே பதற்றத்துல இருக்கிறோம்”ன்னு சொல்றாங்கப்பா…
அதாவது திமுகவை மட்டுமே எல்லா கட்சிகளுமே அட்டாக் செஞ்சு பேசுனா நெகட்டிவ் இம்பேக்ட் அதிகமாகும்.. அது அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஒர்க் அவுட் ஆகும்.. அதுக்கு விஜய் மறைமுகமாக ஹெல்ப் செய்யனும்னு டெல்லி எதிர்பார்க்கிறதய்யா என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
