வைஃபை ஆன் செய்ததும், ”மாற்றம் முன்னேற்றம்” ரொம்பவே ஜரூர்தான் போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா பாமக தகவல்களா?
ஆமாய்யா… பாமக பொதுக்குழு சேலத்துல இன்னைக்கு ரொம்பவே பரபரப்பா, உணர்ச்சி பொங்க நடந்து முடிஞ்சிருக்கு..
இதுல ஹைலைட்டே ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, அவரது மகன் சுகுந்தன் பேச்சுகள்தான்.. அதுவும் ஸ்ரீகாந்தி, தம்பி அன்புமணியை ஒருமையில் விளாசினதோட இல்லாம, ‘ஆர்.எஸ்.எஸ். அடிமை’ன்னு வெடிகுண்டு வீசுனதுதான் இப்ப ரொம்பவே பரபரப்பாகிடுச்சு..

ஆர்.எஸ்.எஸ். அடிமைன்னு பேசுற அளவுக்கு என்னப்பா நடந்துருக்கு?
இதைப் பத்தி சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நெல்லையில அன்புமணி ஒரு பிரஸ்மீட்டை நடத்துனாரு.. அதுல, “ நாங்கள் மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.. நல்ல ஒரு பெரிய கூட்டணி”ன்னு அன்புமணி சொன்னாரு..
அப்ப செய்தியாளர்கள், “பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துறீங்களா?
திமுகவை நீங்க தீயசக்தின்னு சொன்ன மாதிரியே தவெகவும் சொல்லுது.. பாமகவும் தவெகவும் கூட்டணி அமைக்குமா?”ன்னு பல கேள்விகளை கேட்டுப் பார்த்தாங்க.. ஆனா அன்புமணியோ, ஒரு கேள்விக்கு கூட பதிலே சொல்லமாட்டேன்னு ரொம்பவே பிடிவாதம் பிடிச்சாரு..

அன்புமணி இப்படி பிடிவாதமா இருந்ததை பத்தி அவருக்கு நெருக்கமான சர்க்கிளில் விசாரிச்சப்ப, “பாஜகவைப் பொறுத்தவரைக்கும் ‘ஒருங்கிணைந்த பாமக’ கூட்டணிக்கு வரனும்னு நினைக்குது.. எடப்பாடி பழனிசாமியும் அதே மாதிரி ஸ்டேண்டுலதான் இருக்கிறாரு..
எடப்பாடி தொகுதியில 40,000 வன்னியர் ஓட்டுகள் இருக்கு.. அதனால ரெண்டு பாமகவையும் விட்டுவிடக் கூடாதுன்னு எடப்பாடி தரப்பு பேசிப் பார்க்குது..
விஜய்யின் தவெக சைடுல, ஜான் ஆரோக்கியசாமி, சின்னய்யாவை (அன்புமணி) தொடர்பு கொண்டு பேசினாரு.. இந்த ஜான்தான், சின்னய்யாவுக்கு ‘மாற்றம் முன்னேற்றம்’னு பிரசாரம் செஞ்சப்ப வியூக வகுப்பாளரா இருந்தவரு.. அந்த கனெக்ட்டுல தவெக கூட்டணிக்கு வந்துருங்க.. நிறைய சீட் கிடைக்கும்.. நாமதான் ஜெயிப்போம்.. அமைச்சர் பதவியும் கிடைக்கும்.. என்றெல்லாம் பேசிகிட்டு இருக்காரு.. அதனாலதான் சின்னய்யா, ‘கூட்டணி’ பற்றி எந்த கேள்விக்குமே பதில் சொல்லாம கடந்து போனாரு” என்கின்றனர்.
சரி.. இப்ப பாமகவோட மூவ் பத்தி சொல்லும்யா..
டாக்டர் ராமதாஸ்கிட்ட சேலம் அருள், ஜிகே மணி, ஸ்ரீகாந்தி மூலமா எடப்பாடி பழனிசாமி பேசி கூட்டணிக்கு வரனும்னு சொல்றாரு.. இப்ப ஏன் திடீர்னு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக பேசுறாங்கன்னு தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “அய்யாகிட்ட (ராமதாஸ்) எடப்பாடி பேசுனதுக்கு அப்புறமா ஒரு சீரியஸ் டிஸ்கஷன் தோட்டத்துல நடந்துச்சு.. அதுல பல விஷயங்களை ஓப்பனா எல்லாருமே பேசுனாங்க..அன்புமணிகிட்ட என்னதான் விஜய் சைடுல இருந்து பேசுனாலும் சிபிஐ கேஸ் இருக்கிறதால அவரு, பாஜக- அதிமுக கூட்டணிக்குதான் கடைசியா போவாரு..அப்படிங்கிறப்ப, எடப்பாடி சொல்றமாதிரி நாமும் அந்த கூட்டணிக்கு போனா லாஜிக்கா நிறைய சிக்கல் இருக்கு.. நாம கேட்கிற தொகுதிகளை அன்புமணியும் கேட்பாரு.. நாம நிறுத்துற வேட்பாளர்களை தோற்கடிக்கனும்னு வேலை செய்வாங்க.. நாமளும் அவங்க வேட்பாளர்கள் ஜெயிக்க கூடாதுன்னு பார்ப்போம்.. அதனால பாஜக- அதிமுக கூட்டணிக்கு போறது சரியா வராதுன்னு முடிவு செஞ்சாங்க..
அதனால, நாங்க அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரவிரும்பலைங்கிறதையே, அன்புமணி ஒரு ஆர்.எஸ்.எஸ். அடிமைன்னு’ அக்கா ஸ்ரீகாந்தி இன்னைக்கு பொதுக்குழுவுல பேசி வெளிப்படுத்திட்டாங்க” என்கின்றனர்.
ஓஹோ.. அப்ப ராமதாஸ் பாமக எந்த பக்கம் போகுதாம்?
ராமதாஸைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு ஆப்ஷன்ஸ்தான் இருக்குது.. ஒன்னு திமுக, இன்னொன்னு தவெக கூட்டணி..
ரஜினிகாந்த், விஜயகாந்துன்னு சினிமா நட்சத்திரங்களை ரொம்பவே கடுமையா எதிர்த்தவரு டாக்டர் ராமதாஸ்.. சினிமாகாரங்களை விமர்சிக்கிற கட்சின்னு ‘அடையாளமாகிவிட்ட’ பாமக, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பாரா? அது வேண்டாம்னு திமுக கூட்டணியில் இணைவாரா? திருமாவளவன் எதிர்ப்பை மீறி ராமதாஸ் ஸ்டாலின் திமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்வாரா?
என்பதில்தான் கிளைமாக்ஸ் இருக்குது என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப்லைன்னுக்குள் போனது வாட்ஸ் அப்.
