வைஃபை ஆன் செய்தது , “மாற்றம்தானே மாறவே மாறாதது”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா மாற்றம் நடந்துருச்சு?
ராஜ்யசபா தேர்தலை பத்திதான்.. நாளைக்கு நாமினேஷன் பைனல் டேட்.. இன்னைக்கு எல்லா கட்சியும் யாரு வேட்பாளர்கள்னு அறிவிச்சுடுவாங்க..
”திமுகவுல பதவி காலம் முடியுற திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ்.. இவங்க 4 பேருக்கும் மீண்டும் சான்ஸ் இல்லைன்னு ஸ்டாலின் சொல்லிட்டாரு.. புதுக்கோட்டை அப்துல்லா, தூத்துக்குடி ஜோயல் ரெண்டு பேரையும் டிக் அடிச்சிருக்காரு ஸ்டாலின்னு” நாம சொல்லி இருந்தோம்..

இதுக்கு இடையில திருச்சி சிவா, ஸ்டாலினை சந்தித்து ரொம்ப நேரம் உருக்கமா சில விஷயங்களை பேசினாராம்.. இதுல ஸ்டாலின் கன்வீன்ஸ் ஆகி இருக்கிறாராம்.. அதனால திருச்சி சிவா மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாகிறாராம்.. ஏற்கனவே 2000, 2007, 2014, 2020-ன்னு 4 முறை ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த திருச்சி சிவாவுக்கு இப்ப 5-வது முறை சான்ஸ் கிடைக்குது..

இன்னொரு வேட்பாளர் கிறிஸ்தவர்+ மீனவரா இருக்கனும்னு ஸ்டாலின் விரும்பினாரு.. இந்த லிஸ்ட்டுல கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேரை ஸ்டாலின் டிக் அடிச்சிருக்கிறாராம்..
தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் கொடுத்தாச்சு.. அறிவாலயத்துல நேத்து சுதீஷ் ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டு அறிவிச்சுட்டாங்க..

காங்கிரஸுக்கு இன்னொரு சீட் கொடுக்கிறதா ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரு.. ஒருவேளை காங்கிரஸ் வரலைன்னா புதுக்கோட்டை அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றபடியே டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
