வைஃபை ஆன் செய்ததும், “சிரிக்கிறேன்..சிரிக்கிறேன்.. சிரிப்பு வரலை..” பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எலக்ஷன் நேரத்துல இந்த பாட்டு எதுக்கு?
சிச்சுவேசனுக்காகவா பாட்டு கேட்கிறோம்? அதுவா காதுல விழுது.. அங்கிட்டு எது நடக்கனுமோ அது நன்றாகவே நடக்குதுய்யா..
எந்த விவகாரத்தை பத்தி சொல்றீரு?
அறிவாலயத்துக்கு வந்து திமுகவில ஐக்கியமானரே ஓபிஎஸ்.. அவரு முதல்வர் பதவியில இருந்தவரு.. பார்ட்டியில லீடரா இருந்தவர்.. ’எதிரி’ கட்சி பார்ட்டிக்கே போறது எல்லாம் ‘சரித்திர சம்பவம்’ இல்லையா..
ஆமாய்யா.. அதுல என்ன மேட்டர்?
சொல்றேன்யா.. பிப்ரவரி 27-ந் தேதி அறிவாலயத்துக்கு போயி ஸ்டாலினை சந்திச்சு திமுகவில் சேர்ந்தாரு ஓபிஎஸ்.. அவரோட மகன் ரவீந்தரநாத்தும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவுல சேர்ந்துட்டாங்க..
பிப்ரவரி 27-ந் தேதிக்கு முதல் நாள் இரவு முழுவதும் ஓபிஎஸ் ரொம்பவே உச்சகட்ட டென்ஷனில்தான் இருந்தாராம்..
என்னதான் நடந்துச்சுன்னு ஓபிஎஸ்-க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “முதல்ல எங்களுக்கே ஒன்னும் புரியலை.. ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கிறாருன்னு.. அப்புறம்தான் சில விஷயங்கள் தெரியவந்தது..
ஓபிஎஸ் திமுகவுல சேர்றதுக்கு முதல் நாள் சாயங்காலம் சிஎம் ஸ்டாலின் ஒரு மீட்டிங் நடத்தி இருக்காரு.. அந்த மீட்டிங்குல ஓபிஎஸ்ஸை திமுகவுல சேர்க்கிறதால கட்சிக்கு லாபம் என்ன? நட்டம் என்ன?ன்னு ரொம்பவே சீரியசா டிஸ்கஷன் நடந்தது.. அதுல, ”ஓபிஎஸ்க்கு மட்டும்தான் லாபம்.. ”ன்னு சொல்லப்பட்டிருக்கு.. கடைசியாக, ”ஓபிஎஸ் திமுக கூட கூட்டணி மட்டும் வெச்சுக்கட்டும்னு” முடிவு செஞ்சுட்டாங்க..
ஓபிஎஸ்-க்கும் “நீங்க அறிவாலயத்துக்கு நாளைக்கு வர வேண்டாம்னு” சிஎம் சைடுல இருந்து தகவலும் சொல்லிட்டாங்க..
இந்த தகவல் கிடைச்சதுல இருந்துதான் அன்னைக்கு நைட் அவ்வளோ பயங்கர டென்ஷனா இருந்தாரு..
அந்த நைட்டே சேகர்பாபுவை சந்திச்சு ஓபிஎஸ் பேசுனாரு.. அப்புறமா அவங்க சபரீசனையும் போய் பார்த்து பேசிட்டு வந்தாங்க.. அப்பவும் ரொம்ப டென்ஷனாவே இருந்தாரு ஓபிஎஸ்..
ரொம்பவே லேட் நைட்டுலதான், “சரிங்க.. நாளைக்கு காலையில அறிவாலயத்துக்கு வந்துருங்க”ன்னு ஓபிஎஸ்-க்கு தகவல் வந்துச்சு..அப்பதான் , “அப்பாடா”ன்னு மூச்சே விட்டாரு ஓபிஎஸ்.. அடுத்த நாள் அறிவாலயத்துக்கு போயி முறைப்படி திமுகவுல மகனோட சேர்ந்த ஓபிஎஸ், “என் மகனை உங்ககிட்டே ஒப்படைக்கிறேன்”ன்னு உருக்கமாவும் சிஎம் கிட்ட சொன்னாரு என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
