வைஃபை ஆன் செய்ததும், “ ஏதோ நடக்குது.. என்னான்னுதான் தெரியலையே” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா மர்ம ஸ்டோரி சொல்ற மாதிரி ஆரம்பிக்கிறீரு..
அப்படித்தான் நடந்துருக்கு.. முதல்ல திமுக- காங்கிரஸ் கூட்டணியில என்ன நடந்துகிட்டு இருக்குன்னு சொல்றேன் கேளுய்யா..
காங்கிரஸ் போக்குல வருத்தமா, கோபமா இருக்கிற சிஎம் ஸ்டாலின், சீனியர்ஸ்கிட்ட நேற்றுக்கு முதல்நாள் சீரியசா டிஸ்கஷன் நடத்திகிட்டு இருக்காரு.. இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “காங்கிரஸ் கட்சி 41 சீட்டு கேட்டு பிடிவாதம் பிடிக்குது.. போன டைம்மைவிட 16 சீட் அதிகம் கேட்கிறாங்க.. காங்கிரஸுக்கு இவ்வளவு அதிகமான சீட் கொடுத்தா மத்த கூட்டணி கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டிய நிலைமை வரும்.. அப்படி எல்லாத்துக்கும் நாம சீட்டை கொடுத்துட்டா 130 சீட்டுல தான் நாம நிக்க வேண்டிய நிலைமை வரும்னு சிஎம் சொன்னாரு…” என்றனர்.

இதுக்கு அப்புறமா நேத்து பட்ஜெட் தாக்கல் செஞ்ச கையோடு அறிவாலயத்துக்கு நைட் போனாரு சிஎம்.. அங்க திமுகவோட மண்டல பொறுப்பாளர்களான கே.என்.நேரு, கனிமொழி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்னு சீனியர்களுடன் ஆலோசனை நடத்தினாரு ஸ்டாலின்..
வரும் 22-ந் தேதி கூட்டணி கட்சிகளோட பேச்சுவார்த்தையை தொடங்குறதால பேச்சுவார்த்தைக்கான குழு பத்தியும் ஆலோசனை செஞ்சாராம் ஸ்டாலின்..
அந்த டைம்ல… அறிவாலயத்துக்கு காங்கிரஸ் வேணுகோபாலை செல்வப்பெருந்தகை அழைச்சுட்டு வர்றாருன்னும் தகவல் பரவுச்சு.. அதனால மீடியா எல்லாம் குவிஞ்சுட்டாங்க.. ஆனா அறிவாலயத்துக்கு வேணுகோபால் வர்றதா திட்டமே இல்லையாம்..

இதுக்கு இடையில, கேசி வேணுகோபால்கிட்ட கனிமொழி பேசியிருந்தாங்க.. அப்ப, ”கூட்டணியை பத்தி வெளியே எல்லாரும் பேசுறாங்க.. அப்படி எல்லாம் பேச வேணாம்னு சொல்லி வையுங்க”ன்னு அவர்கிட்ட கனிமொழி சொன்னாங்க..
ஓஹோ.. சென்னையில வேணுகோபால் என்ன செஞ்சாரு?
கரெக்ட்டான இடத்துக்கு வந்துருக்கிறீரு.. திமுக- காங்கிரஸ் கூட்டணியில விரிசல் ஏற்பட்ட நாள்முதலே இதுக்கு காரணமே கேசி வேணுகோபால்தான்னு எல்லோருமே கை நீட்டுறாங்க..
ஏன்னா கேரளாவுல லெப்ட் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை கடுமையா இருக்கு.. அங்கே இந்த டைம் காங்கிரஸ் கூட்டணிதான் ஜெயிக்க போகுது.. கேரளாவோட சிஎம் ஆகிடுவோம்னு வேணுகோபால் நம்பிக்கையா இருக்கிறாரு..
கேரளாவுல காங்கிரஸ் ஈஸியா ஜெயிக்க விஜய் சப்போர்ட்டு உதவும்னு கணக்கு போட்டு காய் நகர்த்துறாரு கேசி வேணுகோபால்.. அவரு சொல்லிதான் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி போய் பார்த்தாருன்னும் நாம கூட சொல்லி இருந்தோம்..

டெல்லியில கார்கே, ராகுல் காந்திக்கு அடுத்ததாக காங்கிரஸோட முக்கியமான அதிகார மையம்னா அமைப்பு பொதுச்செயலாளராக இருக்கும் கேசி வேணுகோபால்தான்.. அதனாலதான் அவரோட சென்னை விசிட் ரொம்பவே எதிர்பார்ப்பை எகிற வெச்சுது..
சென்னையில 100 நாள் வேலை திட்டத்தை முன்வைச்சு காங்கிரஸ் பாதயாத்திரை நிகழ்ச்சியில கேசி வேணுகோபால் கலந்துகிட்டாரு… அதுக்கு அப்புறமா நடந்த பிரஸ் மீட்ல, திமுக- காங்கிரஸ் கூட்டணி பத்தி சாதகமாக பேசுனாரு கேசி வேணுகோபால். அதுமட்டுமல்லாம, கனிமொழி கேட்டுகிட்ட மாதிரி, பொதுவெளியில யாரும் கூட்டணியை பத்தி பேசக் கூடாதுன்னும் கண்டிப்பா சொன்னாரு கேசி வேணுகோபால்..
அப்புறமா,சென்னை முகப்பேர் கிழக்கு, எஸ்.கே.வி மஹாலில் புதுசா நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேத்து நடந்துச்சு..

இதுல, கேசி வேணுகோபால், கிரிஷ் சோடங்கர், சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், மாஜி தலைவர்கள்னு பெரும் பட்டாளமே கலந்துகிட்டாங்க.. இந்த கூட்டத்துலயும், பொதுவெளியில யாரும் கூட்டணியை பத்தி பேசக் கூடாதுன்னு ஒரு தீர்மானத்தை சேர்த்தும் நிறைவேற்றினாங்க.. முதல் அஜெண்டாவுல இந்த தீர்மானம் இல்லையாம்.. கேசி வேணுகோபால்கிட்ட கனிமொழி பேசுனதால இப்படி ஒரு தீர்மானத்தை சேர்க்க சொன்னாராம் கேசி வேணுகோபால்..
அந்த கூட்டத்துல வேற என்ன விசேஷமாம்?
கூட்டத்துல கலந்துகிட்ட சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “இந்த கூட்டம் நடந்துகிட்டு இருக்கும்போதே திடீர்னு கேசி வேணுகோபால் எழுந்து, ‘நீங்க ஒங்க ஒர்க் பாருங்க.. நான் அவசரமா வெளியே போறேன்’ன்னு சொன்னார்..
அப்ப செல்வப்பெருந்தகை, ”நானும் உங்களுக்கு உதவியா வர்றேன்னு” சொன்னாரு..
ஆனாலும் கேசி வேணுகோபால், “நீங்க கூட்டத்தைப் பாருங்க”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு.. ” என்றனர்.

ஓ.. கே.சி.வேணுகோபால் தனியா எங்க போனாராம்?
இதைப் பத்தி விசாரிச்சோம்யா.. “கேசி வேணுகோபா அந்த கூட்டத்துல கிளம்பி, அவர் வந்த BMW காரில் ஏறினாரு.. அவரு கூடவே புதுச்சேரி மகிளா காங்கிரஸ் பெண் நிர்வாகி, ரூபி மனோகரனும் அதே காரில கிளம்பினாங்க..
இந்த காரை பின்னாடியே பாலோ அப் பண்ணிட்டு போலீஸ் ஜீப் வந்தது..
கோயம்பேடு ஜங்ஷன்கிட்ட, போலீஸ் ஜீப்பை ரிட்டர்ன் போக சொல்லிட்டாங்க..
அங்கிருந்து வள்ளுவர் கோட்டத்துகிட்ட வந்தப்ப, புதுச்சேரி மகிளா காங்கிரஸ் நிர்வாகி காரில் இருந்து இறங்கிட்டாங்க..
அப்படியே கேசி வேணுகோபால் கார் அண்ணாசாலையை டச் செஞ்சது.. அங்க ரூபி மனோகரனும் இறங்கிட்டாரு..
கேசி வேணுகோபால் கார் அப்படியே ராயப்பேட்டைக்குள் நுழைஞ்சு ராயப்பேட்டை ஹாஸ்பிட்டல் பக்கத்துல நின்னுடுச்சு..
அப்ப காரில்ல இருந்து இறங்குன கேசி வேணுகோபால் இன்னொரு காரில் ஏறினாரு.. அதுக்கு பிறகு கேசி வேணுகோபால் எங்க போனாருன்னே தெரியலை”ன்னு என்கின்றனர்.

ஓஹோ.. நைட் எத்தனை மணிக்கு ரிட்டர்ன் ஆனாராம்?
அதையும் விசாரிச்சோம்யா.. கேசி வேணுகோபாலுக்காக கன்னிமாரா, டிரெண்ட் ஹோட்டல்ஸ் ரூம் போட்டிருந்தாங்க.. ஆனா நைட் முழுக்க அங்கே அவரு வரலை.. இன்னைக்கு காலையில 8 மணிக்குதான் கன்னிமாரா ஹோட்டல் ரூமுக்கு வந்தாரு..
கேசி வேணுகோபாலுக்கு காலை 9 மணி, 11 மணிக்கு ரெண்டு டைம்ல ப்ளைட் டிக்கெட் போட்டும் வெச்சிருந்தாங்க.. ஆனாலும் அந்த ரெண்டு ப்ளைட்டுலயும் அவரு போகலை..” என்கின்றனர்.

ஓ..வேற யாரும் கேசி வேணுகோபாலை சந்திச்சாங்களா?
ஆமாம்.. இன்னைக்கு காலையில செக்ரெட்டேரியேட்டுல சிஎம் ஸ்டாலினை செல்வப்பெருந்தகை சந்திச்சு பேசுனாரு.. இந்த மீட்டிங் முடிஞ்சதும் செல்வப்பெருந்தகை நேரா கன்னிமாரா ஹோட்டலுக்கு போய் கேசி வேணுகோபால்கிட்ட பேசுனாரு..
அதுக்கு அப்புறமா, கேசி வேணுகோபாலை அழைச்சுட்டு போய் 1 மணி ப்ளைட்டுல வழியனுப்பி வைச்சாரு செல்வப்பெருந்தகை.
கேசி வேணுகோபால்கிட்ட செல்வபெருந்தகை என்ன சொன்னாராம்?
கேசி வேணுகோபாலை வழியனுப்பி வெச்ச கையோட அசெம்பிளிக்கு வந்தாரு செல்வப்பெருந்தகை… அவர்கிட்ட எம்.எல்.ஏக்கள் பலரும் என்ன முடிவாகி இருக்குன்னு ? கேட்டாங்க…
இதை பத்தி எம்.எல்.ஏக்கள்கிட்ட பேசுனப்ப, “செல்வப்பெருந்தகைகிட்ட கேசி வேணுகோபால் வந்துட்டு போயிருக்காரே.. முடிவு என்னதான் ஆச்சுன்னு கேட்டோம்..
அதுக்கு, “90% முடிஞ்சிருச்சு.. இப்பதான் நிம்மதியா இருக்கு”ன்னு மட்டும் பதில் சொன்னாரு” என்றனர்.
இப்ப, “கேசி வேணுகோபால் நேத்து நைட் எங்கே போனாரு? எங்கே தங்கி இருந்தாரு? யாரை எங்கே சந்திச்சாரு? விஜய்யை சந்திச்சு பேசுனாரா? ஏன் இப்படி நைட்ல மர்மமான முறையில கேசி வேணுகோபால் திடீர்னு மாயமானாரு?ன்னு ஏகப்பட்ட கேள்விகள்.. விசாரிப்புகள்னு அரசியல் வட்டாரங்கள் பரபரத்துகிட்டு இருக்குய்யா என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
