வைஃபை ஆன் செய்ததும், ‘தேர்தல் வேலைகளை எப்படி செய்யனும்னு நிமிடத்துக்கு நிமிடம் உத்தரவு கொட்டுதய்யா’ என சொல்லியபடியே டைப் செய்தது வாட்ஸ் அப்.
திமுக எம்.பி.க்கள் கூட்டமாப்பா?
ஆமாம்.. எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் சிஎம் ஸ்டாலின்.. திமுக எம்.பிக்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்த மாதிரி உத்தரவுகளும் போட்டிருக்கிறாரே..
அட்வைஸ் என்ன, அலர்ட் என்ன விளக்கமாக சொல்லுமய்யா..
திமுக எம்.பிக்கள் தங்களோட தொகுதியில் வாரத்துல 4 நாட்கள் தங்கி மக்களை சந்திக்கனும்; 15 நாட்களுக்கு ஒருமுறை ரிப்போர்ட் கொடுக்கனும் என்றெல்லாம் ஸ்டிரிட்டாக அட்வைஸ் பிளஸ் ஆர்டர் போட்டுள்ளார் சிஎம் ஸ்டாலின்..

சரி.. ரெட் அலர்ட்னு சொன்னீரே.. அது என்னவாம்? எதுக்காம்?
அது ரொம்ப முக்கியமானது.. முதல்ல காரணத்தை சொல்றேன்… அப்புறம் அவர் கொடுத்த அலர்ட்டை சொல்றேன்..
திமுக நிகழ்ச்சிகளில் பொதுவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்தான் அதிகமாக இருக்காங்க.. எம்.பிக்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் முகம் கூட லோக்கலில் கட்சிக்காரங்களுக்கு தெரியறது இல்லை. எலக்ஷன் நேரத்துல அண்ணனை பார்த்ததுதான் என்கிற ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர் திமுக நிர்வாகிகள்.
ஆனால் எம்.பிக்கள் தரப்போ, “தொகுதிகளில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கண்டுக்கிறதே இல்லை.. லோக்கல் காண்டிராக்ட்டிலும் எதுவும் கிடைக்கிறதும் இல்லை.. எஸ்பியோ, அரசு அதிகாரிகளோ நாம சொன்னாலும் கேட்கிறதும் இல்லை.. இப்படி ஒரு அரசு இருக்கிறதில நமக்கு எந்த பலனும் இல்லை.. எதுக்காக சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஜெயிக்க நாம வேலை செய்யனும்?” என பேசுவதாகவும் ஒரு ரிப்போர்ட் சிஎம் ஸ்டாலினுக்கு போயிருக்கிறது.
இதனால்தான் அறிவாலயத்தில் அத்தனை எம்.பிக்களையும் அசெம்பிள் செய்து ‘சம்பவம்’ செய்துவிட்டார் ஸ்டாலின்..

ஓ.. அதான் ரெட் அலர்ட்டா? அதை சொல்லுமய்யா?
சொல்றேன்யா.. “உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் எம்.பிக்கள் கலந்துக்கனும்; மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணியாற்றனும்.. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டவங்களை சேர்க்கனும் என்று சொல்லிவிட்டு
“2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டார்கள். அதேபோல், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும் ” எனவும் கட்டளை போட்டார் ஸ்டாலின்..
அதாவது எம்.எல்.ஏக்கள் ஜெயிச்சு நமக்கு என்ன லாபம்னு அசால்ட்டா இருக்கலாம்னு நினைச்ச எம்.பிக்களுக்கு செம்ம ரெட் அலர்ட் கொடுத்துவிட்டிருக்காரு சிஎம் ஸ்டாலின் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.