வைஃபை ஆன் செய்ததும், “அடங்காத காளை ஒன்னு. அடிமாடா போனதடி. கண்மணி ”என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. யாரையோ சொல்ற மாதிரி இருக்கே?
உமக்கு பல முறை சொல்லிட்டேன்.. அதுபாட்டுக்கு பாடுது.. நாம நம்மபாட்டுக்கு விஷயத்தை ஷேர் செய்வோம்..
சரிய்யா..என்ன புது சங்கதி?
திமுக- காங்கிரஸ் உறவுல புது ட்விஸ்ட் கிளம்பி இருக்கு.. அறிவாலய பேச்சுவார்த்தையை முடிச்சுட்டு அரக்க பரக்க டெல்லிக்கு போயி ராகுலை சந்திச்சாரு கிரிஷ் சோடங்கர்னு சொல்லி இருந்தோம் இல்லையா?
ராகுல் காந்தியை கிரிஷ் சோடங்கர் சந்திச்ச பின்னாடி இன்னைக்கு சொல்லி வெச்ச மாதிரி 2 சம்பவம் நடந்திருப்பதுதான் ஹாட் டாப்பிக்கா ஓடுது..
இன்னொரு இன்னைக்கு பகல் 1.34 மணிக்கு ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்துல சிஎம் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்காரு.. அதுக்கு ஸ்டாலினும் நன்றி சொல்லி இருக்காரு..

இதுல என்ன ட்விஸ்ட்? புதிர் போடாம சொல்லுமய்யா?
இருக்கே.. போன வருஷம் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பர்த் டே விஸ் பண்ணும் போது “ Wishing a very happy birthday to my brother and Tamil Nadu Chief Minister, Thiru @mkstalin. We continue to stand together in our commitment to preserve India’s rich diversity, federal structure, and Constitutional values”ன்னு அன்பா சொல்லி இருந்தாரு.. ரெண்டு பேரும் இணைஞ்சு செயல்படுவோம்னும் குறிப்பிட்டிருந்தாரு..

ஆனா இந்த டைம், ஸ்டாலினுக்கு விஸ் பண்ணின ராகுல் காந்தி ட்வீட்டுல “My brother” மிஸ்ஸிங்.. ஸ்டாலினும் தேங்ஸ் சொல்லும் போது ராகுல் சொல்லாததால “My brother””ன்னு சொல்வதை தவிர்த்துட்டாரு..
இதை வெச்சுதான் சோசியல் மீடியாவுல ராகுலை விளாசிகிட்டு இருக்காங்க.. பார்லிமெண்ட் எலக்ஷன் வந்தா “My brother”.. ஸ்டேட் எலக்ஷனா வந்தா “Thiru”ன்னு சொல்வீங்களான்னு தொடங்கி ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.. 5 சீட் தரலைன்னா “பிரதர்”னு கூட சொல்ல மாட்டீங்களோன்னு திட்டு வேற.. ‘பிரதர்’னு ராகுல் காந்தி போட்ட பழைய ட்வீட் ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டு வறுத்தெடுக்கிறாங்க..
சரி.. இன்னொரு மேட்டர் என்னய்யா?
ராகுல் காந்தி இந்த ட்வீட் போட்டது 1.34 மணிக்கு.. ANI ட்வீட் பேஜில 1.35 மணிக்கு அறிவாலயத்துல பேச்சுவார்த்தை நடத்துன கிரிஷ் சோடங்கர் வீடியோ பேட்டியை போட்டிருக்காங்க..

அதுல என்னய்யா வில்லங்கமா?
வில்லங்கமா இல்லையா?ன்னு நமக்கு தெரியாது.. ஆனா அதுல, “திமுக 25 சீட் தர்றேன்னு சொல்லுது.. நாங்க ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டோம்.. திமுகவுக்காக நாங்க பல முறை தொகுதிகளை குறைச்சுகிட்டோம்.. அவங்க எங்களுக்கு திருப்பித் தர்ற நேரம் இது.. எங்களுக்கு அசெம்பிளியில போதுமான எம்.எல்.ஏ.க்கள் இருந்தா நாங்களே சொந்தமா ராஜ்யசபா எம்.பி.யை அனுப்பி வைப்போம்” என்றெல்லாம் சொல்லி இருக்காரு..
அதோட மட்டுமில்லாமல், “விஜய் கட்சிக்கு இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு இருக்கு.. எங்க தலைவர் ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியோட பலத்தையும் விஜய் கட்சி அங்கீகரிக்குது”ன்னும் சொல்லி இருக்காரு கிரிஷ் சோடங்கர்..
டெல்லியில ராகுல் காந்திக்கு நெருக்கமானவங்ககிட்ட இதை பத்தி கேட்டப்ப, “கூட்டணியில காங்கிரஸ் இருக்கிறதை திமுக விரும்பாத மாதிரி தெரியுதுன்னு ராகுல் கிட்ட கிரிஷ் சோடங்கர் சொல்லி இருக்கிறாரு.. அதனால ரியாக்சனை காட்டி இருப்பாங்க” என சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
